முகத்தில் அசிங்கமான கரும்புள்ளிகளா..? இப்படி செய்தால் ஒரே வாரத்தில் மாயமாகி விடும்!


முக அழகை மேம்படுத்துவதில், மூக்கிற்கும் பெரும் பங்கு உண்டு. மூக்கில் தோன்றும் பருக்கள் அழகைக் கெடுப்பதைப் போலவே கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளும் அழகைக்கெ டுக்கின்றன.

ஆனால் இந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளை பற்றி கவலைப்படத் தேவையே இல்லை. இவற்றை போக்க வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிமுறைகள் உள்ளன. இவற்றை நீங்கள் செய்வதால் உங்களது மூக்கு முன்பை போல பளபளப்பாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் மாறும்.

01. தேன்
தேனை இலேசாக சூடேற்றி அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி இலேசாக மசாஜ் செய்து முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.


02. பேக்கிங் சோடா
அரை மேசைக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் தண்ணீரை கலந்து, பேஸ்டாக கலந்து கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பூச வேண்டும். இது உலந்த பிறகு குளிர்ச்சியான நீரினால் கழுவி விட வேண்டும்.

03. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நன்கு தேய்த்து பின் நீரில் கழுவி துணியால் அழுத்தி துடைத்தால் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் மென்மையாக இருக்கும்.


04. ஜெலட்டின் பவுடர்
ஜெலட்டின் பவுடரை சூடான பாலில் கலந்து, பேக் போல போட வேண்டும். இதனை நன்றாக காயவிட வேண்டும். காய்ந்த உடன் இதனை உரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் முடிகள் இல்லாமலும், கரும்புள்ளிகள் இல்லாமலும் இருக்கும்.

05. தக்காளி
தக்காளியை அரைத்து அதனை முகத்தில் தடவி ஊற வைத்து பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்பசை நீங்குவதோடு கரும்புள்ளிகளும் போய் விடும்.

06. பால்
தினமும் 2-3 முறை பாலை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.


07. புதினா
1 மேசைக்கரண்டி மஞ்சள் தூளில் புதினா ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி உலர வைத்து குளிர்ந்த நீர் பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் கரும் புள்ளிகள் மறையும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!