இலியானா போல மெல்லிடை வேண்டுமா? இத தினமும் செய்யுங்க..!


அழகைப் பொருத்த வரையில், எல்லாப் பெண்களுக்கும் இருப்பது ஒரே வகையான ஆசை தான். ஆம், சருமம் வெள்ளையாக இருக்க வேண்டும், கூந்தல் நீளமாக இருக்க வேண்டும், மெல்லிய இடை இருக்க வேண்டும் என்பன தான்.

மெல்லிடை வேண்டும் எனும் ஆசையில் பல பெண்கள் க்ரீன்டீ, ஒருவித கஷhயம் முதலான அனைத்தையும் பயன்படுத்துவதுண்டு. மேலும் சிலர் எடையைக் குறைக்க வேண்டும் எனும் ஆசையில் கடையில் விற்கப்படும் மருந்துகள் சிலவற்றையும் உட் கொள்வதுண்டு.

ஆனால் அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது. நமது நன்மைக்கென நாம் உட்கொள்ளும் மருந்துப் பொருட்களே எமது உயிருக்கு ஆபத்தாக வந்து விடுவதுண்டு. ஆனால், எடையைக் குறைக்கும் விடயத்தில் உடற்பயிற்சிகளை முயன்று பார்க்கலாம்.


அதிலும் குறிப்பாக மெல்லிடையைப் பெற நினைக்கும் பெண்கள் அதற்கேற்ற உடற் பயிற்சியை முயற்சித்தால் மெல்லிடையைப் பெறலாம்.

ஆகவே மெல்லிடைக்கான உடற்பயிற்சியை எப்படி செய்வது என்று இப்போது விரிவாகப் பார்ப்போம்!

தரையில் நேராகப் படுக்கவும். கைகளை இடுப்புக்கு அப்புறம் வைத்தபடி கால்களை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்குஉ யர்த்தவும்.

இந் நிலையில் அடிவயிற்றை உள்ளிழுத்து சில நொடிகள் அப்படியே இருக்கவும். பின் கால்களைக் கீழே இறக்கவும். இதே போல் தினசரி பத்து முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியால் இடுப்புப் பகுதியில் உள்ள தேவைற்ற கொழுப்புகள் அனைத்தும் குறையும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!