வெள்ளரிக்காயை கோடையில் அதிகமாக ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா..?


இயற்கை நம்மை காலத்திற்கேற்ற பாதுகாப்புகளை கொடுத்து நம்மை காக்கிறது. அதை நாம் முழுமையாய் உணராமல் விடுவதால்தான் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம்.

உதாரணமாக கோடையில் அதிகம் கிடைப்பதுதான் வெள்ளரிக்காய். குவிந்து கிடக்கும் இதன் அருமையினை பற்றி நன்கு அறிந்தால் இதன் பலன்களை முழுமையாய் பெறுவோம்.

* கோடை என்றாலே உடலில் நீர் சத்து எளிதில் குறையும். இதனால் உடலின் கழிவுப்பொருள் வெளியேற்றத்தில் பிரச்சினை ஏற்படலாம் வெள்ளரியில் நார்சத்தும், நீர் சத்தும் அதிகம் என்பதால் இந்த பிரச்சினை இருக்காது.

* வெள்ளரி சிறுநீரக பாதை பிரச்சினைகளை தீர்க்க உதவும். வெள்ளரி சாறு இருவேளை குடித்தால் போதும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்து விடும். சிறுநீரகத்தின் அழுத்தத்தினை குறைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாய் வைக்கும்.

* வெள்ளரிக்காய்க்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் இவைகளை நீக்கும் ஆற்றல் உள்ளது. தினமும் இதன் சாறு எடுத்துக் கொள்ள இப்பிரச்சினைகள் தீரும் ஜீரண சக்தி கூடும்.

* வெள்ளரி குடலிலுள்ள நாடா பூச்சிகளை நீக்கும். இதிலுள்ள எகிப்ஸின் என்ற என்னஸம் நாடா பூச்சிகளை கொன்று விடும்.


* வெள்ளரி ரத்த அழுத்தத்தினை சீராய் வைக்கும். இதிலுள்ள பொட்டாசியம் உப்பு (சோடியம்) அளவினை சீர் செய்து தாது உப்புகளை சீராய் வைக்கும்.

* வெள்ளரி வீக்கத்தினை குறைக்கும். இதிலுள்ள பீட்டா கரோடின் நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கும். வீக்கம் தரக்கூடிய பராஸ்டோக்ளான்டின் என்ற பொருளை தடுக்கும். உடல் முன்னேற வெள்ளரி உதவும்.

* வெள்ளரி சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. வெள்ளரியில் உள்ள ஹார்மோன் உடலின் கணையம் இன்சுலின் ஹார்மோன் சுரக்க உதவுகின்றது.

* வெள்ளரி பல வகை புற்று நோய்களை எதிர்க்கும் சக்தி வாய்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்க வல்லது.

* இதிலுள்ள சில பொருட்களை (ஸ்பைடோ கெமிக்கல்) வாய் துர்நாற்றத்தினை நீக்க வல்லது.

* உடலில் நச்சுத்தன்மையை நீக்குவது.

* வெள்ளரியில் உள்ள வைட்டமின் ‘கே’ எலும்புகளை உறுதிப்படுத்த வல்லது.


* நரம்புகளுக்கு வலு அளிப்பது.

* குறைந்த கலோரியின் காரணமாக உடல் எடை குறைய உதவுகின்றது.

* உடல் அழகாகும், இறுகும்.

* கண்களின் மீது வெள்ளரி துண்டுகள் வைக்க கண் இறுக்கம் நீங்கும். கண் கருமை நீங்கும். சுருக்கம் நீங்கும்.

* உடலில் தடவும் வெள்ளரி சாறு வெயிலால் ஏற்படும் கருமையினை நீக்கும்.

* சரும புத்துணர்வு ஏற்படும்.

* உடல் உப்பிசம் நீங்கும்.

* வெள்ளரி சாறு சிறிது நேரம் தலையில் தடவினால் முடி கொட் டுதல் நீங்கும். முடி பளபளவென இருக்கும்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!