அறுவை சிகிச்சையின் பின்னர் உடல் வீங்கி விட்டதா..? இவை எல்லாம் தான் காரணம்..!


எடை அதிகரிப்பதென்பது எம்மில் பலருக்கு காணப்படும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதிக கொழுப்பு சேருதல், ஆரோக்கியமற்ற உணவு முறை, பிரசவம் மற்றும், தேவையான சத்துக்கள் உடலுக்குச் சேராமை போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவரது எடை அதிகரிக்கின்றது.

குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவருக்கும் இந்த எடை அதிகரிக்கும் பிரச்சினை பரவலாக காணப்படுகின்றது. அது சரி, அறுவை சிகிச்சைக்கும் எடைக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கின்றீர்களா?

ஆம், அறுவை சிகிச்சைக்கும் எடைக்கும் தொடர்புண்டு. எந்த காரணங்களால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவருக்கு எடை கூடுகின்றது எனப் பார்ப்போம்.


01. உடலில் அதிகபடியான நீர் தங்குதல்
அறுவை சிகிச்சை நடைபெற்றவுடன், உடலினுள் உள்ள உறுப்புகளுக்கு இடையில் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால், உடல் பருமன் அதிகளவில் கூடுகின்றது.

02. அதிர்ச்சி
மனித உடலில் அறுவை சிகிச்சை நடைபெற்றவுடன், உடலில் உள்ள திசுக்கள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்திருக்கும். இதனால் உடலில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் காரணமாக உடல் அதிகளவு நீரை சேர்த்து வைத்துக்கொள்ளும். இதனால் உடல் எடை கூட வாய்ப்புண்டு.


03. மன அழுத்தம்
ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது, அவரது உடலில் உள்ள ஹோர்மோன்கள் வழமைக்கு மாறாக செயற்பட ஆரம்பிக்கும். இதுவே அறுவை சிகிச்சை மூலம் தோன்றும் மன அழுத்தத்தின் போது, அதிகளவு நீர் சேமிக்கப்படும். இதன் மூலம் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும்.

04. உணவு
சிலர் அறுவை சிகிச்சை செய்து முடித்தவுடன் அதிகளவு உணவு உண்ண எத்தணிப்பர். இதனால் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!