பாகற்காயை கண்டாலே முகம் சுழிப்பவரா..? இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என தெரியுமா..?


பாகற்காய் என்றாலேயே எல்லோரும் முகம் சுழிப்பார்கள். ஏனெனில் யாரும் அதன் கசப்பான சுவையை விரும்புவதில்லை. பெரியவர்கள் கூட பாகற்காயை புறக்கணித்து விடுகின்றார்கள். ஆனால் உண்மையில் பாகற்காயில் பல்வேறு சத்துக்கள் பொதிந்துள்ளன.

விட்டமின் சீ, ஃபோலேட், விட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் பொதிந்துள்ளன. இந்த பாகற்காய் ஒவ்வாமை மற்றும் பக்டீரியா என்பவற்றிற்கு எதிராக போராடும் தன்மையுடையது.

இந்த பாகற்காயை நாம் உட்கொள்வதால் எமக்கு என்ன நன்மைகள் கிட்டும் என்பதை பார்ப்போம்.


01. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது
பாகற்காயில் உள்ள மேற்குறிப்பிட்ட சத்துக்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

02. வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடுகின்றது
ஆட்கொள்ளி நோயான எயிட்சை கூட குணமாக்கும் மருத்துவ குணம் பாகற்காய்க்கு உண்டு. அத்துடன் அல்சர் மற்றும் உடலினுள் உள்ள காயங்கள் போன்றவற்றையும் இந்த பாகற்காய் குணமாக்குகின்றது.

03. உணவு சமிபாடு மற்றும் ஈரலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது
பாகற்காயில் உள்ள விட்டமின்கள் ஈரலின் செயற்பாட்டிற்கு உதவி புரிவதோடு சிறுநீரகங்களில் உள்ள கற்களையும் இல்லாதொழிக்கின்றது. மேலும் வயிறு தொடர்பான நோய்கள் மற்றும் குடல் தொடர்பான உபாதைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.


04. புற்றுநோயை இல்லாதொழிக்கின்றது
புரொஸ்டேட், மார்பக மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு எதிராக இந்த பாகற்காய் செயற்படுகின்றது.

05. சுவாசப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது
இருமல், தடுமல் தொடக்கம் தொண்டை முதல் சுவாசப்பை வரையான அனைத்து விதமான வியாதிகளையும் தீர்க்கும் அற்புதமான சக்தி இந்த பாகற்காய்க்கு உண்டு.

பாகற்காயை ஒதுக்கி வைப்பதை நிறுத்துவோம், பலனை அனுபவிப்போம்! – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!