அடிக்கடி உங்கள் நகம் உடைகிறதா? வீட்டிலேயே இயற்கையாக மருந்து தயாரிப்பது எப்படி..?


நகம் உடைவதனால் ஏற்படும் வலி தாங்க முடியாதது தான். இந்த பிரச்சினை இப்போது ஆண் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்படுகின்றது. அது சரி, நகங்கள் ஏன் உடைகின்றன? அதற்கு பல காரணங்கள் உண்டு. வயதாதல், அதிக இரசாயன பயன்பாடு, அடிக்கடி கை கழுவுதல், உடல் வறட்சியடைதல் மற்றும் அதிக நகப்பூச்சு பாவனை என்பன அவற்றுள் சில.

இவை தவிர்ந்த வேறு சில காரணங்களும் உள்ளன. பங்கஸ் தொற்று, தோல் அழற்சி மற்றும் இரத்த சோகை ஏற்பட்டாலும் நகங்கள் உடைவதுண்டு. காரணங்கள் எதுவாக இருந்தாலும் இனி கவலை கொள்ளத் தேவையில்லை. இதற்கு சரியான மருந்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது எவ்வாறு என நாம் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்
தேங்காண் எண்ணெயை நகங்களில் பூநினால் அது நகங்களை வலிமையாக்குவதோடு ஈரலிப்பாகவும் மாற்றும்.

செய்முறை
01. தேங்காய் எண்ணெயை நகங்களில் தடவுங்கள்
02. 5 – 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்
03. நாளொன்றுக்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்


விட்டமின் ஈ
நகங்களில் ஈரப்பதன் அற்றுப் போதல் அவை உடைவதற்கு முக்கிய காரணமாகின்றன. விட்டமின் ஈயை நகங்களில் பூசுவதன் மூலம் ஈரப்பதன் அதிகரிக்கின்றது. இதன் மூலம் நகம் உடைதல் தடுக்கப்படுகின்றது.

செய்முறை
01. விட்டமின் ஈ மாத்திரையை உடைத்துக் கொள்ளவும்
02. அதில் உள்ள எண்ணெயை நகங்களில் பூசிக்கொள்ளவும்
03. 2 – 3 நிமிடங்கள் வரை நகங்களை நன்றாக மசாஜ் செய்யவும்
04. சிறந்த பலனைப் பெற ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன் இவ்வாறு செய்யவும்

சூடான எண்ணெய் மசாஜ்
எண்ணெயை சுட வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது அதை நகங்களில் மசாஜ் செய்வதன் மூலம், நகங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றது. இதன் மூலம் நகங்கள் வலுப்பெறுகின்றன.

செய்முறை
01. ஒலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் சன்பிளவர் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தவும்
02. அனைத்தையும் ஒன்றாக கலந்து சூடாக்கவும்
03. இளஞ்சூடாக இருக்கும் போது உங்கள் விரல்களை அந்த எண்ணெய்க் கலவையில் வைத்துக் கொள்ளுங்கள். ஆறும் வரை விரல்களை எடுக்க வேண்டாம்.
04. பின்னர் உங்கள் கைவிரல்களை நன்றாக கழுவிக் கொள்ளவும்
05. சுத்தமான துவாளைக் கொண்டு விரல்களை துடையுங்கள்
06. வாரத்தில் இரண்டு முறை படுக்கைக்கு போகும் முன் இவ்வாறு செய்யுங்கள்


கிறீன் டீ
கிறீன் டீயில் அதிகளவு அன்டிஒக்ஸிடன்டுகள் உள்ளதால் நகங்கள் வலுவடையுவாம்.

செய்முறை
01. ஒரு கோப்பை தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
02. தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சில தேயிலை இலைகளை இடவும்
03. தண்ணீர் கொதித்ததும் அதனை ஆற விடவும்
04. 10 – 15 நிமிடங்கள் வரை விரல்களை அந்த தண்ணீரில் வைத்திருக்கவும்
05. வாரத்தில் இரு முறை இவ்வாறு செய்யவும்

தக்காளி
தக்காளியில் உள்ள லைக்கோபீன் மற்றும் பயோட்டீன் என்பன நகங்கள் வளர்ச்சி பெறுவதற்கு உதவுவதோடு உடைவதிலிருந்தும் பாதுகாக்கின்றன.

செய்முறை
01. ஒரு முழுத் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
02. அரைத்த தக்காளியை பாத்திரத்தில் இடவும்
03. குறித்த பாத்திரத்தில் சிறு துளிகள் ஒலிவ் எண்ணெயை விடவும்
04. தக்காளி மற்றும் ஒலிவ் எண்ணெய் கலந்த கலவையில் விரல்களை 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்
05. 10 நிமிடங்கள் கழிந்தவுடன் சுத்தமான துவாய் கொண்டு நகத்தை துடைக்கவும்
06. ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்வது நகங்களுக்கு சிறந்தது


ஆப்பிள் சாறு வினிகர்
ஆப்பிள் வினிகரில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து, மற்றும் கல்சியம் என்பன நகங்களை வலுப்படுத்துவதோடு தொற்று ஏற்படுவதிலிருந்தும் பாதுகாக்கின்றன.

செய்முறை
01. ஆப்பிள் வினிகர் மற்றும் தண்ணீர் என்பவற்றை ஒரே அளவில் பாத்திரத்தில் இட்டுக் கொள்ளவும்
02. 10 நிமிடங்கள் வரை விரல்களை அந்த கலவையில் ஊறவிடவும்
03. பின்னர் நகங்களை சுத்தம் பண்ணவும்
04. ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்வது நல்லது

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேன்
மஞ்சள் கருவில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் தேனில் உள்ள பங்கஸை எதிர்க்கக்கூடிய சக்தி என்பன நகங்களை பாதுகாக்கும் வல்லமை கொண்டன.

செய்முறை
01. முட்டையின் மஞ்சள் கருவுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலக்கவும்
02. சிறிதளவு தண்ணீரையும் அதனுடன் சேர்க்கவும்
03. குறித்த கலவை நல்ல பதமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்
04. கலவை தயாரானதும் அதை விரல்களில் பூசி 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்
05. 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் தண்ணீரில் கழுவவும்.– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!