கர்ப்ப கால தூக்கமின்மை பிரச்சனையை விரட்ட இதோ எளிய சில வழிகள்..!


பெண் ஒருத்தி கருவுற்றுவிட்டாள் என்றாலே அதில் பல்வேறு சவால்கள் உண்டு என்பது நாம் அறிந்ததே. தாய்மை என்பது ஒரு வரம். அதிலும் அதனை தாங்கிக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பது என்பது மறுபிறப்பு.

குழந்தையை சுமப்பது என்பது அவ்வளவு சாதாரண விடயம் அல்ல. தேகாரோக்கியத்திற்கு தூக்கம் இன்றியமையாதது என்று எம் முன்னோர்கள் கூறினார்கள். அந்த தூக்கம் கருவுற்ற தாய்க்கும் மிக அவசியம். ஆனால் பொதுவாக சில தாய்மார்களுக்கு தூக்கம் என்பது கர்ப்ப காலத்தில் எட்டாக்கனியாக உள்ளது.

இன்சோம்னியா என அழைக்கப்படும் இந்த தூக்கமின்மை ஏற்பட என்ன காரணம் என நாம் இப்போது பார்ப்போம்.

01. வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவு
தாயின் வயிற்றில் உள்ள குழந்தை அசைவதை நுட்பமாக தொட்டு இரசிப்பவள் தாய். ஒருவகையில் குழந்தை நலமாக உள்ளது என்பதை இந்த அசைவின் மூலமே கணித்து விடலாம். இதில் அளப்பரிய சந்தோஷம் ஏற்பட்டாலும், குழந்தை அசையும் ஒவ்வொரு தருணத்திலும் தாய்க்கு நிம்மதியாக உறங்கக்கிடைப்பதில்லை. தாய் உறங்கிக் கொண்டிருந்தாலும், குழந்தை அசையும் போது முழிப்பு வந்துவிடும். அதற்கு பிறகு உறங்குவதென்பது மிகவும் கடினம்.


02. பதட்டம் மற்றும் மன அழுத்தம்
பதட்டம் மற்றும் மன அழுத்தம் என்பன கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும். குறிப்பாக சொல்லப்போனால் பிரசவம் பற்றிய சிந்தனை பதட்டத்தை ஏற்படுத்துவதோடு, அதன் விளைவாக தூக்கமின்மையும் ஏற்படுகின்றது.

03. கால் சுளுக்கு
கர்ப்ப காலத்தில் கால்களில் சுளுக்கு ஏற்படுவதென்பது அனைத்து தாய்மார்களிலும் ஏற்படக்கூடிய ஒரு விடயம். இந்த நிலைமை பொதுவாக 4 தொடக்கம் 6 ஆம் மாதங்களிலேயே ஆரம்பிப்பதுண்டு. நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாலும், கால்களில் ஏற்படும் ஒருவித உணர்வு காரணமாக தூக்கம் ஓடிப் போய்விடும்.

04. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
வயிற்றில் உள்ள குழந்தை வளர வளர, இரவு நேரங்களில் தாய்க்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்படுவதும் தூக்கமின்மை ஏற்படக் காரணமாகின்றது.

05. படிப்படியாக பெருக்கும் தாயின் வயிறு
தாயின் வயிறு காரணமாக எந்த பக்கம் திரும்பி படுப்பது என்பது மிகவும் கடினமான விடயமாக மாறிவிடுகின்றது. எவ்வளவு தான் திரும்பித் திரும்பி படுத்தாலும் அது கஷ;டமாகவே தோன்றும். அதனால் தூக்கமின்மை ஏற்படும்.


06. உணவு
கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் ஏற்படுத்திக்கொள்ளும் உணவுப் பழக்கவழக்கங்கள் என்பன கூட தூக்கமின்மைக்கு வித்திடுகின்றது. தேநீர் மற்றும் கோப்பி என்பவற்றை தாய் ஒருவர் அடிக்கடி உட்கொள்வாராயின் அதுவும் தூக்கத்தை பாதிக்கும். இந்த விடயத்தில் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியம்.

07. விசித்திரமான கனவுகள்
கருவுற்றிருக்கும் தாயின் மனதில், தனது குழந்தையின் பிறப்பு, எதிர்காலம், தனது உடல் நிலை மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிந்தனைகள் அலை பாய்ந்துகொண்டே இருக்கும். இதனால் உறங்கும் நேரங்களில் பல விசித்திரமான கனவுகள் வந்து தூக்கம் கெட்டுப்போகும்.– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!