30 வயதுக்கு மேல் இந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது!

இன்றைய வாழ்க்கை முறையில், 30 வயதிலேயே பலருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என பல ஆரோக்கிய கோளாறுகள் உள்ளது.

இதற்கு உண்ணும் உணவும் முக்கிய காரணமாக உள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டோர் உண்ணக்கூடாத உணவுகளின் பட்டியலை தெரிந்துக்கொள்ளுங்கள்…

டயட் சோடா:

டயட் சோடாக்கள் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த பானங்களில் உள்ள BVO, உடலினுள் அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்கி, உடல் பருமனை உண்டாக்குமாம்.

சுகர்-ப்ரீ உணவுப் பொருட்கள்:

சுகர்-ப்ரீ உணவுப் பொருட்களில் சுவைக்காக செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த சுவையூட்டிகள் உடலில் டாக்ஸின்களை அதிகரித்து, கல்லீரல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும்.

கேன் சூப்:

கேன் சூப்புகளில் பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் உப்பு போன்றவை ஏராளமான அளவில் இருப்பதால், அதில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, அதன் விளைவாக இதய நோய்க்கும் வழிவகுக்கும்.

பாப்கார்ன்:

பாப்கார்ன்களில் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்னில், ட்ரான்ஸ் கொழுப்புக்கள்(trans fats) உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை.

சோயா சாஸ்:

உப்பிற்கு சிறந்த மாற்று பொருள் சோயா சாஸ். ஆனால், சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸில் 879 மிகி சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!