வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனையா..?

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உள்ளன. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் 16 கலோரி உள்ளது. அதில் கொழுப்பு இல்லை. ஆனாலும் வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிடும்போது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், தும்மல், மூச்சுத்திணறல், சருமத்தில் தடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். கோழிகளின் உடலில் காணப்படும் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாவால் முட்டையின் வெண் படலத்திற்கு தீங்கு நேரலாம்.

அந்த பாக்டீரியா முட்டை ஓடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற பரப்புகளில் படர்ந்திருக்கலாம். சால்மோனெல்லாவை நீக்குவதற்கு நீண்ட நேரம் மற்றும் அதிக வெப்பநிலையில் வேகவைக்க வேண்டும். இல்லாவிட்டால் முட்டையின் மேல் பகுதியிலும், குறைவான வெப்பநிலையில் வேகவைத்த முட்டைகளிலும் அந்த பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பயோட்டின் குறைபாடும் ஏற்படலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் அவிடின் எனும் புரதம் உடலில் உள்ள பயோட்டினை கரைத்துவிடும். அதில் உள்ள அல்புமின், உடலில் உள்ள பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாக இருக்கிறது.

இதன் காரணமாக சரும பிரச்சினைகள் ஏற்படலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள் அதிகம் உள்ளன. மருத்துவர்களின் கருத்துப்படி, சிறுநீரக பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அதிக அளவு புரதம் சாப்பிடுவது ஆபத்தானது.

சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 0.6 முதல் 0.8 கிராம் வரையிலான புரதத்தையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் தினமும் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கலாம். கல்லீரல் பாதிப்பு கொண்டவர்கள் வெள்ளைக்கருவை தவிர்க்கலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!