உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி கூந்தல்!

சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான்.


தரமற்ற அழகு சாதன பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவற்றில் கலந்திருக்கும் ரசாயன பொருட்கள், பலவித சரும நோய்களை உருவாகக்கூடியவை.

முகப்பரு, முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் முதல் மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான்.

பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றாலும் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.

சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்த சிக்கல்களை எளிமையாகச் சரிசெய்ய முடியும் என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

மேலும் பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தம்தான் காரணம், என்றும் கூறுகிறார்கள்.

உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும், கூந்தலையும் பராமரிக்கும்போது உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!