வாரத்தில் ஒரு நாளாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

வாழையின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுவோர் அதிகம்.

சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இப்படி தினமும் குடித்தால், நீரிழிவிற்கான மருந்துகளை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.

வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்தவும் பெரியும் உதவியாக இருக்கும்.

செய்முறை: மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில் உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் தயார்.- source: webdunia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!