விநாயகரை 27 நட்சத்திரகாரர்களும் எப்படி விரதம் இருந்து வழிபடலாம்

விநாயகருக்கு உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய அலங்காரம் செய்யும் பொழுது அதற்குரிய பலன்களும் விசேஷமானதாக அமையும். அந்த வகையில் 27 நட்சத்திரங்களுடையவர்களும் விநாயகரை எப்படி அலங்கரித்து வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

அஸ்வினி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக் கலசம் வைத்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டால் சகல யோகங்களும் வரும்.

பரணி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு சந்தன அலங்காரம் செய்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

கிருத்திகை

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு தங்க கிரீடம் சூட்டி, வெள்ளி கவசம் அணிவித்து வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் உண்டாகும்.

ரோகினி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு சந்தன அலங்காரம் செய்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் உங்கள் வீட்டில் நிறைந்து காணப்படும்.

மிருகசீரிஷம்

இந்த நட்சத்திரத்தில்பிறந்த நீங்கள் விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, கஸ்தூரி மஞ்சள் கொண்டு அலங்காரம் செய்து வழிபட வேண்டும். இதனால் அனைத்து பாகங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

திருவாதிரை

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, தங்க கிரீடம் சூட்டி அலங்காரம் செய்து வழிபட்டால் எல்லா துன்பங்களும் நீங்கி, பெரும் புண்ணியம் சேரும்.

புனர்பூசம்

இந்த, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, சந்தன அலங்காரம் செய்து வழிபட எல்லா பாக்கியங்களும் உண்டாகும்.

பூசம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப்பெருமானுக்கு அன்னம் வைத்து, தங்க கிரீடம் சூட்டி, கஸ்தூரி மஞ்சள் கொண்டு அலங்காரம் செய்து வழிபட்டு வந்தால் அனுகூலமான பலன்களை காணலாம்.

உத்திரம்

இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, திருநீறு அலங்காரம் செய்து வழிபட்டு வந்தால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

ஹஸ்தம்

இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, சந்தன அலங்காரம் செய்து வர எல்லா துன்பங்களும் தீரும்.

சித்திரை

இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக் கவசம் அணிவித்து வழிபட வேண்டும் இதனால் நிறைய செல்வங்களும், தாராள தன வரவு உண்டாகும்.

சுவாதி

இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம் புல் மாலை சாற்றி தங்க கிரீடம் அணிவித்து வழிபட்டு வர நல்லது நடக்கும்.

விசாகம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு திருநீரு கொண்டு அலங்காரம் செய்து வழிபட்டு வர வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கும்.

அனுஷம்

இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, ரோஜாப்பூ மாலை போட்டு, தங்க கிரீடம் அணிவித்து கஸ்தூரி மஞ்சள் கொண்டு அலங்காரம் செய்து வழிபட்டு வர எல்லா பாக்கியங்களும் உண்டாகும்.

கேட்டை

இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, திருநீறு அலங்காரம் செய்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டு வர எல்லா பேரும் உண்டாகும்.

மூலம்

இந்த நட்சத்திரக்காரர்கள் அருகே விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி சந்தன அலங்காரம் செய்து வழிபாடு செய்ய அதிர்ஷ்ட யோகங்கள் வரும்.

பூராடம்

இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வழங்கும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, திருநீறு அலங்காரம் செய்து, கிரீடம் சூட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்ய அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

உத்திராடம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானை அருகம்புல் மாலை மட்டும் சாற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

திருவோணம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, ஸ்வர்ணம் வைத்து வழிபாடு செய்ய மேலும் மேலும் செல்வங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

அவிட்டம்

இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது வெள்ளி கவசம் அணிவித்து, மலர் அலங்காரம் செய்து வழிபட சிறப்பான பலன்கள் உண்டாகும்.

சதயம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது வெள்ளிக்கவசம் அணிவித்து குங்கும அலங்காரங்கள் செய்து வழிபட எல்லா வளங்களும் உண்டாகும்.

பூரட்டாதி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, அன்னம் வைத்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டு வர எல்லா செல்வங்களும் நிறைந்து காணப்படும் யோகம் உண்டாகும்.

உத்திரட்டாதி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு ஒரு ரோஜா மாலை போட்டு அலங்காரம் செய்து வழிபட்டு வந்தாலே எல்லா வளங்களும் நிறைந்து காணப்படும்.

ரேவதி

ரேவதி நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, மலர் அலங்காரம் செய்து, வெள்ளி கவசம் அணிவித்து வழிபட்டு வந்தால் பதினாறு செல்வங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!