மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வங்கி சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதமாகும். தெய்வ வழிபாடுகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.
கடகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் இருந்தாலும் நற்பலன்களும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகங்களில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
தனுசு
இன்று உங்கள் வீட்டிற்கு நவீன பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய மாற்றம் நிகழும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக போடும் திட்டங்கள் வெற்றியை அளிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.
கும்பம்
இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன் கிட்டும்.– கணித்தவர்: ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன், Phone: 0091-7200163001, 938376300 * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!