அல்சர் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணமும் தீர்வும்


உணவு விஷயங்களில் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்.

துரித உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது, வேகமாக சாப்பிடுவது, உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குவது போன்றவை அசிடிட்டி பிரச்சினை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். உணவு விஷயங்களில் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம். முதலில் உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். மூன்று வேளை உணவையும் சீரான இடைவெளியில் சாப்பிட வேண்டும். ஒருபோதும் அதிக இடைவெளி விட்டு சாப்பிடக்கூடாது.

உலர் திராட்சை அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க உதவும். உலர்திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு பின்பு ஊற வைத்த உலர்திராட்சையை மென்று சாப்பிடலாம். பனங்கற்கண்டும் அசிடிட்டியை போக்கும்தன்மை கொண்டது. இயற்கையாகவே உடலில் அமிலத்தன்மையை சமநிலையில் பராமரிப்பதற்கு பனங்கற்கண்டு உதவும்.

கற்கண்டு நீரை பருகிவந்தால் உடலில் நீர்ச்சத்து சீராக பராமரிக்கப்படும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டுவையும், சிறிது ரோஜா இதழ்களையும் கலந்து பருகலாம். அசிடிட்டி மற்றும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் இரவு சாப்பிட்டு முடித்ததும் கற்கண்டு நீரை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!