வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்தால் உடலில் நடக்கும் அற்புத மாற்றம்..!


நம்முடைய உடலில் உள்ள ரத்தம் எவ்வளவுக்கு எவ்வளவு நீர்மத் தன்மையுடன் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு ஆக்சிஜன் மிக எளிதாகக் கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தலை முதல் பாதம் வரையிலும் ரத்தம் சீறிப் பாய்ந்தபடி இருக்க வேண்டும். அதற்கு நீர்ச்சத்து மிக அவசியம்.

ரத்தம் உடலில் பாய்வதன் வேகம் குறைந்து உறைந்துவிடக் கூடாது. நாம் சரியான உடல் உழைப்பு செய்யாத போதும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும்போதும், அந்த உணவுகளில் உள்ள நச்சுப்பொருட்கள், கொழுப்புகள் ஆகியவை ரத்தத்தில் அதிகமாக ஆரம்பிக்கும். இதனால் ரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும்

ரத்த ஓட்டம் குறைவதனாலேயே பெரும்பாலான நோய்கள் உண்டாகின்றன. ஆரோக்கியமான உணவுகள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, ரத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவும் செய்யும்.

சில உணவுப்பொருட்களுக்கு இயற்கையிலேயே ரத்தத்தை சுத்தப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் உண்டு. அவற்றில் சில பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த ஜூஸ் ரத்த சுத்திகரிப்பை மிக வேகமாகச் செய்து முடிக்கிறது.

5 கேரட், ஒரு துண்டு இஞ்சி, ஒரு வெள்ளரிக்காய், 1 ஆரஞ்சு, 1 எலுமிச்சை ஆகியவற்றை எடுத்து அவற்றின் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பொருட்களுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு ஜூஸாக அடித்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் இன்னும் சிறிது தண்ணீர் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாமே தவிர, இந்த ஜூஸை வடிகட்டக்கூடாது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்துப் பாருங்கள். பிறகு உடலில் உண்டாகும் புத்துணர்ச்சியை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.–Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!