நீங்கள் இதில் எந்த வகை..? இப்படி செய்தால் இலகுவாக உடலில் உள்ள கொழுப்பு மாயமாகும்..!


அதிக எடை குறைக்க பல வழிகள் உள்ளன மற்றும் இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆய்வுகள் மற்றும் ஆயிரக்கணக்கான குறிப்புகள் அன்றாடம் நாம் படிக்கலாம். ஆனால் அவை அனைத்தும் பயனலிக்கும் என்று கூற முடியாது. என்னென்றால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உடல் அமைப்பு அதனால் தான் அவை சிலருக்கு பயனலிப்பது இல்லை. அதனால் நம் உடலில் எடை எப்படி எடை போடுறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற பயனுள்ள மற்றும் பாதுகாப்பான எடை இழப்புக்கான பயிற்சியை மேற்கொள்ளவேண்டுடியது அவசியம்.

பல்வேறு வகையான உடல் பருமனை ஆய்வு செய்து 6 வகையான உடல் கொழுப்புகளை உடலில் எங்கு முக்கியமாக சேர்கிறது என்பதனை அறிந்து அதனை மிகச் சிறந்த வழியில் எவ்வாறு குறைக்கவேண்டும் என்பதனை வரையறுத்துள்ளோம்.


மேல் உடல் கொழுப்பு

காரணம்:

அதிக கலேரி நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதே இதற்கான காரணம்.

அதை எவ்வாறு அகற்றுவது:

இவ்வாறான கொழுப்பை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்யுங்கள். ( நீச்சல், நடைபயிற்சி)

சர்க்கரை நிறைந்த பானங்கள் அருந்துவதை கட்டுபடுத்துங்கள். இந்த பானங்களால் உங்கள் வயிறு எளிதில் நிறம்பாது. எனவே இதனை அதிக அளவு எடுத்துக்கொள்வீர்கள். இதனால் கலேரிகள் தான் அதிகமாகும்.


அடி வயிற்று கொழுப்புகள்

காரணம்:

உடலின் இந்த பகுதியில் கொழுப்பு சேமிக்கும் சில காரணங்களான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம்.

அதை எவ்வாறு அகற்றுவது:

மன அழுத்தம் தவிர்த்து ஓய்வு எடுக்க பழகுங்கள். மன அழுத்தம் ஹார்மோன் கார்டிசோல் கொழுப்பை உங்கள் வயிற்றில் குவிக்கிறது, எனவே நீங்கள் ஒரு நல்ல வழி தியானம் செய்யலாம் அல்லது மூச்சிபயிற்சி செய்யலாம்.

கீரின் டீ குடிக்கவும். இது ஒரு பெரிய கொழுப்பு பர்னர். சூடான கீரின் டீ உங்களுக்கு மனதை அமைதிபடுத்தும்.

உடலின் கீழ் பகுதி கொழுப்பு

காரணம்:

உங்கள் தொடைகள் மற்றும் கால் பகுதி குண்டாக இருக்கிறது என்று கவலைபடுபவரா நீங்கள். அப்போது கண்டிப்பாக நீங்கள் ஒரு பசையம் இல்லாத உணவை முயற்சி செய்ய வேண்டும்.

அதை எவ்வாறு அகற்றுவது:

மலைகளிலும் மாடிகளிலும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இது உங்கள் தொடையில் மற்றும் கால் பகுதியில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவும்.

காலை உணவை தவிர்க்க வேண்டாம். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மாற்றி நாள் முழுவதும் பசியாக உணரவைக்கும். எனவே நீங்கள் நாள் முழுவதிலும் உணவை உண்பீர்கள்.


தொப்பை வீக்கம்

காரணம்:

அதிகமாக மது அருந்துதல் உங்கள் தொப்பை வளரும். உங்களுக்கு அழகான உடல் அமைப்பு வேண்டும் என்றால் நீங்கள் குடிக்கும் மதுவை கணக்கு செய்துகுடியுங்கள்.

அதை எவ்வாறு அகற்றுவது:

மதுவின் கலோரிகளில் பெரும்பாலானவை வயிற்று கொழுப்பை அதிகரிக்கும்போது தொப்பையாகிவிடுகிறது. இந்த தொப்பையானது உடலுக்கு மற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

உங்கள் தினசரி விகிதத்தை சிறு பகுதிகளாக பிரிக்கவும், அடிக்கடி சாப்பிடவும். இது உங்கள் வளர்சிதை மேம்படுத்த, ஆற்றல் பராமரிக்க உதவும், மேலும் உங்கள் தொப்பை ஒவ்வொரு உணவுக்கு பிறகு சிறியதாக தோன்றும்.


கீழ் உடல் கொழுப்பு

காரணம்:

கால்கள் நின்று கொண்டு இருக்கும் போது கால் நிரம்பு பிரச்சினைகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படும்.

அதை எவ்வாறு அகற்றுவது:

உங்கள் உடலில் உப்பு திரவ ஏற்பாட்டை ஏற்படுத்துவதால் தான் இப்படி ஆகிறது. உப்பு உணவுகளை உண்ணாமல் தடுத்தால் வீக்கத்தை தவிர்க்கலாம்.

30 நிமிடங்களுக்கும் மேல் ஓரே இடத்தில் அமராதீர்கள். எழுந்து நிற்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய பாதங்களை உயர்த்துவதற்கு முற்படுங்கள்.

பெரிய வயறு மற்றும் இடுப்பு பகுதியில் அதிக சதையா?

இப்படி இருப்பவர்கள் உடனடியாக உடற்பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

அதை எவ்வாறு அகற்றுவது:

நீங்கள் போதுமான அளவு உறங்குகீறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். தூக்கமின்மை உங்கள் ஹார்மோன்கள், அதிகப்படியான பசியின்மை, எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கலாம், இது பெரும்பாலும் கொழுப்பை வயிற்றில் சேமித்து வைக்கும்.

நார்ச்சத்து நிறைந்த உணவு அதிகம் சாப்பிடுங்கள். இது உங்கள் பசியின்மை மற்றும் கலோரி உறிஞ்சுதலை உணவிலிருந்து குறைக்க உதவுகிறது.-Source: manithan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!