‘சவாசனா’ பண்ணி உடல் எடையை குறைக்கலாம் என தெரியுமா..?


யோகாவில் சவாசனா சிறப்பான ஒன்று. உடல் உறுப்புகளை பல்வேறு நிலைகளில் வளைத்து, நெளிந்து பயிற்சி செய்வது வழக்கம். அதில் உடலை ஓய்வான நிலையில் படுத்திருப்பது ஒரு நிலை. இந்த நிலையில் உடல் எடையை குறைக்க எவ்வாறு உதவும் என்பதை பார்க்கலாம்.

பழங்கால அறிவியல் முறையான யோகா, உடலை தளர்த்திக் கொள்வதில் இருந்து தொடங்குகிறது. நமது ஒட்டுமொத்த உடலும் ஓய்வு நிலைக்கு சென்று, செல்களை மறு உற்பத்தி மற்றும் சீரமைக்கச் செய்கிறது. அப்போது மன அழுத்தம் முழுவதுமாக வெளியேறுகிறது. உடல் எடை அதிகரிப்பிற்கு மன அழுத்தமும் ஒரு காரணம். மன அழுத்தம் நீங்கிய பிறகு, நேர்மறையான ஆற்றல் பெருகி, உடல் செயல்பாடுகள் அதிகரித்து, ஏராளமான கலோரிகள் எரிக்கப்படும்.

சவாசனா மூலம் உடல் செல்களை மறுசீரமைத்து, புத்துயிர் பெறச் செய்கிறது. தீவிர உடற்பயிற்சி செய்த பிறகு, சவாசனா செய்து உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஓய்வென்றாலும், கலோரிகள் எரிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கும்.


உடல் பதட்டத்தின் காரணமாக, தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். சவாசனா மூலம் உடலை தளர்வடையச் செய்து, மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் அச்சம் பெருமளவு குறைகிறது.

உடல் ஓய்வு நிலையில் இருக்கும் போது, நேர்மறையான ஆற்றலை வெளியிடுகிறது. இதனால் மனம் மகிழ்ச்சி அடைகிறது. இது உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. மகிழ்ச்சி, வளர்சிதை மாற்றம், கலோரி ஆகியவற்றிற்கு இடையே தொடர்பு இருக்கிறது.

மன அழுத்தம் மற்றும் கொழுப்பு நிறைந்த உடல் சோர்வை ஏற்படுத்துகிறது. சவாசனா செய்வதன் மூலம் உடல் ஓய்வு நிலைக்கு செல்கிறது. மன அழுத்தம் மற்றும் கொழுப்பை பெருமளவு குறைக்கிறது. அதற்கு யோகாவை தொடர்ந்து செய்வது அவசியம். இதன்மூலம் உடலில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!