பித்தம் அதிகமாகி தலை சுற்றுகின்றதா..? உடனடியாக குணப்படுத்தும் எளிய சித்த மருத்துவம்..!


பித்தம் பிடித்திருக்கிறது என்று கூறுவார்கள். நம்முடைய உடலில் உண்டாகும் அத்தனை பிரச்னைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும்தான் காரணம்.

அதில் பித்தம் உடலில் அதிகமானால் என்ன செய்ய வேண்டும்?…

1. இஞ்சியைத் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி, தேன் கலந்து வதக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

2. நார்த்தம் இலைகளை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், பித்தம் தணிந்து, அதனால் அடிக்கடி வாந்தி வருவது நின்றுபோகும்.

3. களாக்காயை அடிக்கடி சாப்பிட்டால், பித்தம் தொடர்பான நோய்கள் நீங்குவதுடன், பித்த வாந்தியும் நிற்கும்.


4. சீரகத்தை வாணலியில் போட்டு சூடாக்கி, பொடி செய்து, தினமும் காலையில் துாங்கி எழுந்ததும் ஒரு எலுமிச்சைச் சாற்றில் அந்த சீரகப் பொடியைப் போட்டுக் குடித்தால் மூன்றே நாள்களில் பித்தம் குறையும்.

5. சாம்பார் வெங்காயத்தைக் கொஞ்சம் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் பித்தம் தணியும்.

6. அரச மரக் குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அரைத்து, அதில் கொஞ்சம் தேன் கலந்து குடித்தால் பித்தம் குறையும்.


7. தினமும் ஒரு வாழைப்பழம் அல்லது பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், அதிகப்படியான பித்தம் தணிவதுடன், பித்தம் சம்பந்தமான நோய்களும் குணமாகும்.

8. மாதுளம் பழச் சாற்றில் கொஞ்சம் தேன் கலந்து குடித்தால், பித்தம் தணிவதுடன், பித்த வாந்தியும் நிற்கும்.

9. பித்தம் அதிகமானால், கால் பாதங்களில் வெடிப்புகள் தோன்றும். இதைப்போக்க, மருதோன்றி இலையைப் பறித்துக் கொஞ்சம் தயிர் சேர்த்து அரைத்து, இரவு படுக்கும்முன் வெடிப்புகள் மீது தடவிக்கொண்டால் விரைவில் குணம் பெறலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!