கர்ப்பிணிகள் அம்மைத் தடுப்பூசியைக் ஏன் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா..?


கர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிக்கு ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மைத் தொற்று ஏற்பட்டிருந்தால், கருவில் இருக்கும் குழந்தையின் இதயம், நரம்பு மண்டலம் ஆகியவை பாதிக்கப்படும்.

இதனால், குழந்தை பிறவிக் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. மேலும், வளரும் பருவத்தில் குழந்தைக்குக் காது கேளாமை, பார்வை இழப்பு போன்ற குறைபாடுகளும் தோன்றிட வாய்ப்பு உண்டு. கருச்சிதைவு அல்லது குறைப் பிரசவமும் நேரிடக்கூடும்.

பெரும்பாலும், நீங்கள் குழந்தையாக இருக்கும்போதே இந்த தடுப்பூசி போடப்பட்டிருக்கும். அவ்வாறு போடப்படவில்லை என்றால் உடனே போட்டுக்கொள்ளுங்கள். இந்த ஊசியைப் போட்டுக்கொண்ட அடுத்த மூன்று மாதம் வரை நீங்கள் கருத்தரிக்கக் கூடாது. ஒருவேளை கருத்தரித்திருந்தால் முதுல் மூன்று மாதத்துக்குள் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளக் கூடாது.-
Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!