எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னைகளையும் தீர்க்கும் சித்த மருத்துவ முறைகள்..!


நெல் பொரியைத் தண்ணீர் ஊற்றி வேகவைத்து கஞ்சிப் பதத்தில் குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

உடல் மெலிந்து, வயிறு மட்டும் பெரிதாகவும் இருக்கும் குழந்தைகளுக்குக் காரைக் கிழங்கைத் தோல் நீக்கி சூப் வைத்துக் கொடுத்தால் பிரச்னை தீரும்.

நாயுருவிச் செடியைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரைத் தினமும் ஏதாவது ஒருவேளை குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் உடனே குணமாகும்.

வயிறு உப்புசமாக இருந்தால், வயிற்றின் மீது டர்பன்டைன் திரவத்தை ஊற்றித் தடவிவிட்டு, பிறகு சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தால் வயிறு உப்புசம் சரியாகும்.

கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்தால் வயிற்று வலி உடனே குணமாகும்.


பெருங்காயத்தைப் பொரித்துப் பொடியாக்கி, அரை ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி பறந்துபோகும்.

சர்ப்பகந்தா வேரைத் தண்ணீரில் போட்டு வேகவைத்து, அந்தத் தண்ணீரைத் தினமும் காலை மாலை இருவேளையும் குடித்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலி உடனே குறையும்.

அகத்திக் கீரையைத் தண்ணீரில் வேகவைத்து, அந்தத் தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் கடுமையான வயிற்று வலி உடனே குணமாகும்.

சுடு தண்ணீரில் வில்வ மரப் பிஞ்சைப் போட்டுக் குடித்தால் எப்படிப்பட்ட வயிற்று வலியும் உடனே மறைந்துபோகும்.

மாதுளம் பழத் தோலை நெருப்பில் சுட்டுக் கரியாக்கி அதை கோதுமைச் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.

சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள் துாளும், சிறிது பனங்கற்கண்டும் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி மறையும்.


உப்பு, சீரகம், இஞ்சி மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து உள்ளுக்குச் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வயிற்று உப்புசம் சரியாகிவிடும்.

அருகம்புல்லைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்தால் வயிற்று எரிச்சல் குணமாகும்.

வெற்றிலையுடன் கொஞ்சம் ஒமத்தைச் சேர்த்து நன்றாக அரைத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும்.

வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டால் உடனே நிவாரணம் பெறலாம்.

மாங்கொட்டைப் பருப்பை நன்றாகக் காயவைத்துப் பொடியாக்கி, அடிக்கடி தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழியும்.

பாகற்காயின் விதையை அரைத்துப் பாலுடன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகளும், புழுக்களும் ஒழியும்.

மாதுளம் செடியின் வேரைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழியும்.


வேப்ப மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து சாறு பிழிந்து அதில் 10 மி.லி. தேன் கலந்து சாப்பிட்டால் இரண்டே நாளில் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழியும்.

தினமும் பல் துலக்குவதற்கு வேப்பங் குச்சியைப் பயன்படுத்தினால், பல் தொடர்பான நோய்கள் குணமாவதுடன், வயிற்றில் உள்ள பூச்சிகளும் சாகும்.

வயிற்றுப் புண் உள்ளவர்கள் பார்லியைச் சிவக்க வறுத்து அரைத்து, சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் குணம் பெறலாம்.

வில்வ மர வேரை பாலுடன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி உடனே மறையும். நீர்க்கடுப்பு, வாந்தி போன்றவையும் குணமாகும்.

வயிற்று வலியாலும், தொடர் பேதியாலும் அவதிப்படுபவர்கள், வில்வ மரப் பிஞ்சுகளில் இருந்து சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் உடனே பலன் கிடைக்கும்.


வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள், தொட்டாற்சுருங்கி இலையை நன்றாக அரைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

நெல்லிக்காயைச் சாறு பிழிந்து சாப்பிட்டால் ஆசனவாய்க் கடுப்பு மற்றும் வயிற்றுக் கடுப்பு இரண்டும் குணமாகும்.

கசகசாவைத் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே குணமாகும்.

காலையில் பல் துலக்கியதும், தயிரில் வெந்தயத்தைப் போட்டுக் குடித்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

அத்திப் பழத்தை வெய்யில் காயவைத்துப் பொடியாக்கி தேனில் ஊறவைத்து, தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும்.

அடிக்கடி உணவில் மணத்தக்காளிக் கீரையைச் சேர்த்துக் கொண்டால், வயிறு சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!