வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே நகச்சுத்தியை எப்படி குணமாக்குவது..?


நகச்சுத்தி ஏற்படும் போது அதனால் ஏற்படும் அசௌகரியத்தை மற்றும் வலியை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அது மட்டுமின்றி, வைத்தியரிடம் சென்றால் கூட அதற்கு அவர் மருத்துவம் பார்க்கும் போதும் தாங்க முடியாத வலி ஏற்படும்.

பூஞ்சை அல்லது பக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவதே இந்த நகச்சுத்தி ஆகும். இதை உடனடியாக சரி செய்யா விட்டால், அது விரலுக்கே ஆபத்தாக முடியும்.

இந்த நகச்சுத்தியை வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே குணமாக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், வீட்டிலிருந்தே எவ்வாறு நகச்சுத்திக்கு மருத்துவம் செய்வது என்பதைப் பார்ப்போம்.

01. சோடா மற்றும் உப்பு கலந்து உருவாக்கப்பட்ட பசையை நகச்சுத்தி வந்த இடத்தில் தடவினால், அது பூஞ்சைகளை வளர விடாமல் தடுத்து நகச்சுத்தியை குணமாக்குகிறது.

02. எலுமிச்சம்பழத்தை இரு துண்டுகளாக வெட்டி, அதனுள் நகத்தை புகுத்தினாலும் நகச்சுத்தி குணமாகும்.


03. மஞ்சளைவிட மருத்துவம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நகச்சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம் என்னவென்றால், நீரில் மஞ்சள் எண்ணெயை கரைத்து, நகத்தில் தடவினால் போதும்.

04. உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நகச்சுத்தி சரியாகும். சாதாரண கல் உப்பை கரைத்து அந்த நீரையே இதற்கு பயன்படுத்தலாம். கடல்நீரில் நனைத்தாலும் நகச்சுத்தி சரியாகும். பின்னர் அந்த இடத்தில் வினிகரை தடவ வேண்டும்.

05. மிக எளிதாக கிடைக்கக் கூடிய கற்றாழைக்கு நகச்சுத்தை ஆற்றும் சக்தி உள்ளது. கற்றாழை சாறுடன் மஞ்சள்தூள் அரைத்து, விளக்கெண்ணைய் விட்டு சூட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகச்சுத்தி குணமாகும்

06. வேப்பெண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும், விரலை சுற்றிலும் தேய்த்துவர, நகச்சுத்தி விரைவில் குணமாகும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!