இந்தியரை சுட்டு கொன்ற அமெரிக்கருக்கு எத்தனை ஆண்டு சிறை தெரியுமா..?


ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் மனைவி சுனாயனாவுடன் வசித்து வந்தார்.

கடந்தாண்டு பிப்ரவரி 22-ம் தேதி அலுவலக பணி முடித்து தன் நண்பர் அலோக் என்பவருடன் கான்சாஸ் நகரில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் ஸ்ரீனிவாஸ் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஆடம் பரின்டன் (52) என்ற அமெரிக்கர் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது நண்பரை தரக்குறைவாக பேசினார்.

இதையடுத்து, மதுபான விடுதி ஊழியர்கள், ஆடமை வெளியேற்றினர். சிறிது நேரத்தில் திரும்பி வந்த ஆடம், ‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என ஆத்திரத்துடன் கத்தியுள்ளார். மேலும் தான் கொண்டுவந்த துப்பாக்கியால் ஸ்ரீனிவாசையும், அவரது நண்பரையும் சுட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த ஸ்ரீனிவாஸ் மரணமடைந்தார். அவரது நண்பர் காயம் அடைந்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆடமிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வருகிற மே மாதம் 4-ம் தேதி அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை எதிர்த்து ஆடம் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதில் ஸ்ரீனிவாசை சுட்டுக் கொன்ற, ஆடம் பரின்டன் பரோலில் வெளிவர முடியாதபடி, 50 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!