ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் தூக்கமின்மை… இந்த விஷயங்களா கண்டிப்பா தவிர்த்திடுங்க..!


முறையான இரவு தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். அவ்வாறு இல்லாத பொழுது உடல் ஆரோக்கியம் கெடுகின்றது. இவ்வாறு உடல் நலத்தை கெடுக்கும் தூக்கமின்மைக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதனைப் பார்ப்போம்.

பலர் குறுகிய காலமாக தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கூறுவார்கள். சிலர் தூக்கமின்மை அறிகுறிகள் சமீப காலமாக ஏற்படுவதாகக் கூறுவார்கள். சிலர் நெடுங்காலமாக தூக்கமின்மை காரணமாக அவதிப்படுவதாகக் கூறுவர்.

நெருங்கிய உறவினை இழத்தல், வேலை செய்யும் இடத்தில் அதிக ஸ்ட்ரெஸ், உடலில் வலி, நீண்ட கால நோய், விடாத கவலை இவை அனைத்தும் ஒருவருக்கு தூக்கமின்மையினை ஏற்படுத்த முடியும்.

செயற்கை விளக்குகளை அதிகம் உபயோகித்தல் கூட தூக்கத்திற்கு தொந்தரவினைக் கொடுக்கும். அவ்வாறு அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள் காலை, மாலை சிறிது நேரம் சூரிய ஒளியில் இருக்கலாம். இது உங்கள் தூக்க நேரம், தரம் இரண்டினையும் உயர்த்தும்.

அதிகமான நீலநிற ஒளியில் மாலையில், இரவில் இருக்க வேண்டாம். டி.வி. பெட்டிகளை கூட இரவில் முழுமையாக அணைத்து விடுங்கள். நீலஒளி உடலினை பகல்நேரம் போல் உணர வைக்கும். எனவே மாலை, இரவில் நீல ஒளியினை தவிர்த்து விடுங்கள்.

• பகல் 12 மணிக்கு பிறகு காப்பி, டீ இரண்டினையும் நிறுத்தி விடுங்கள். கேலின் தூக்க தரத்தினை வெகுவாய் பாதிக்கும்.
• பகலில் நீண்ட நேரம் தூக்கம் வேண்டாம். இது இரவு தூக்கத்தினைக் கெடுக்கும்.
• தூங்கும் நேரமும், விழிக்கும் நேரமும் எப்பொழுதும் முறையாக இருக்கட்டும். • ஆல்கஹாலை நம் வாழ்வில் இருந்து அடியோடு ஒழித்து விடுவோம்.
• படுக்கை அறை அமைதியாக, சுத்தமாக இருக்க வேண்டும்.
• இரவு வெகு நேரம் சென்று உணவு அருந்தாதீர்கள்.
• மாலையிலேயே மனது ரிலாக்ஸ் ஆகி விடட்டும்.
• மாலையோ, இரவோ குளியுங்கள்.
• உங்கள் படுக்கை, தலையணை இவை முறையாக இருக்க வேண்டும்.
• உறங்கப் போவதற்கு முன்பு கடின உடற்பயிற்சி செய்யக்கூடாது.


நீண்ட ஆய்வுகள் கூறுவது முறையற்ற தூக்கம், குறைவான தூக்கம். இவை தவிர 89 சதவீதம் குழந்தைகளின் எடை கூட காரணமாய் இருக்கின்றன. இதே காரணம் தான் 55 சதவீதம் பெரியோர்களின் எடை கூடவும் காரணமாய் இருக்கின்றன. அளவு குறைவான தூக்கம் ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றது. தேவையான அளவு தூக்கம் உடையவர்கள் தேவையான அளவே உண்கின்றனர். ஆரோக்கியமாய் இருக்கின்றனர்.

கடந்த பல வருடங்களாக அநேகரும் குறைந்த அளவே தூங்குகின்றனர். இதன் காரணமாகவே அதிக மக்கள் நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். அதிக கவனக்குறைவுடன் இருக்கின்றனர். தூக்க குறைபாடு இருதய நோய், வாதம் பாதிப்பிற்கு காரணமாக இருக்கின்றது.

தூக்க குறைபாடு சர்க்கரை நோய் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. தூக்க குறைபாடு மனச்சோர்வினை ஏற்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது. உடலில் வீக்கங்கள் ஏற்படுகின்றன. நாம் பழகும் முறையில் பண்பற்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன. நல்ல தூக்கம் 7-8 மணி நேரம் இருக்கும் பொழுது குறைபாடுகள் நீங்குகின்றன. எனவே முறையாய் தூங்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டு நம் ஆரோக்கியத்தினை நாமே ஏற்படுத்திக் கொள்வோம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!