மலச்சிக்கலா..? இனி கவலை வேண்டாம்.. இதோ எளிய வழிகள்..!


மைதா, பீட்சா, பர்கர் ஆல்கஹால், புகை பழக்கம், சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, உடல்பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது.மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும்.

வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம்.இதிலிருந்து எளிதில் விடுபட எளிய டிப்ஸ்:

1. சிறிது உலர் திராட்சையை இரவில் தூங்கும் முன் சுடுநீரில் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை சாப்பிடுங்கள். மறக்காமல் நீரையும் குடியுங்கள். இதனால் அவற்றில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

2. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். முக்கியமாக அதில் சுவைக்காக தேன் கலந்து கொள்ளுங்கள். இப்படி குடிக்கும் போது அது தீவிர மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயில் இருந்தும் விடுவிக்கும்.

3. காலையில் எழுந்ததும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள். பின் 15 நிமிடம் கழித்து காலை உணவை உட்கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது குடலியக்கம் சிறப்பாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

4. இரவு உணவு உட்கொண்ட பின் பேரிச்சம் பழத்தை சூடான பாலில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் தூங்குவதற்கு முன் பேரிச்சம் பழத்துடன் பாலைக் குடியுங்கள். இப்படி செய்யும் போது, பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராகி, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவும்.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!