குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..? வாங்கி இப்பவே சாப்பிடுங்க..!


குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை. இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது அந்த சீசனில் விளையும் பயிர் என்பது மட்டுமல்ல.

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிட வேண்டும் என்று சொல்வதற்கு இன்னும் நிறைய காரணங்கள் உண்டு. அவை…


வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் உடலை வைத்திருக்கும். பொதுவாக, குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.

வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பைத் தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைவு.


வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீர் படுத்தக்கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.

வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப் பதத்தைப் பாதுகாக்கும். இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதைத் தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டி- ஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தைத் தரக்கூடியது.


ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம். வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமானக் கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படச் செய்யும்.

ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் அதை சாப்பிட முயற்சிக்காதீர்கள். குளிர்காலத்தில் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் வேர்க்கடலை சாப்பிடுவதற்கான சரியான காலம் இதுதான் என்றும் சொல்வார்கள்.-Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!