இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம்..!


இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 21–ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நீடிக்கிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!