நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்க போகுது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!


தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

ஓய்வாக இருக்கும் பொழுதும், வயிறு காலியாக இருக்கும் பொழுதும், நிமிடத்திற்கு 12-15 முறை நிதானமாக ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். மூக்கு வழியாக உள்ளிழுத்து வாய் வழியாகவும், காற்றினை வெளிவிடலாம். இவ்வாறு 5 நிமிடங்கள் வரை செய்யலாம். எளிமையான பயிற்சி, தினமும் 20 நிமிடங்களாவது நடங்கள். கால், இருதயம், நுரையீரல் இவற்றுக்கு மிகவும் சிறந்தது.

* சிறிய எளிய புஷ் அப் செய்யுங்கள்.
* வயிற்றிலிருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.
* கோணல் மானலாக இல்லாமல் எப்பொழுதும் முறையாக பயன்படுத்துங்கள்.
* சிறிய வயதினராயின் சிறிது நேரம் ஓட்டப் பயிற்சிசெய்யுங்கள்.
* நீச்சல் பழகுங்கள்.
* தினமும் 15 நிமிடமாவது சற்று துரித நடைபயிற்சி செய்தால் மனநிலை புத்துணர்ச்சி பெறும்.
* சிந்தனைத்திறன் கூடும்.
* அலர்ஜி பாதிப்புகள் குறையும்.
* உடலின் செயல் திறன் கூடும்.
* ஆயுள் கூடும்.
* ஜிம்முக்கு செலவழிக்கும் காசு மீதமாகும்.
* இளமை கூடும்
* ஆழ்ந்த தூக்கம் கிட்டும்
* மனம் அமைதி பெறும்.
* மூளை செயல் திறன் கூடும்.
* வலி மாத்திரைகள் எடுப்பது குறையும்.
* எலும்பு வலுபெறும்.
* கண்பார்வை தெளிவு பெறும்.
* மற்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

இதனை படித்த பின்பும் தினமும் 15 நிமிடமாவது துரித நடைபயிற்சி செய்யாமல் இருப்பீர்களா என்ன?-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!