வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்..!


வாட்ஸ்அப் செயலியில் இன்-ஆப் பிரவுசிங் மற்றும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உள்ளிட்ட அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இரு அம்சங்களும் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிய பயனர்களுக்கு வழி செய்யும்.

இந்நிலையில், ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியில் ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சம் கொண்டு போலி தகவல்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட இருப்பதாக தெரிகிறது. இதற்கென வாட்ஸ்அப் இரண்டு பெரிய அம்சங்களை செயலியில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

இரு அம்சங்களும் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இருஅம்சங்களும் எவ்வாறு வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ளலாம். பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பகுதியை இயக்க பயனர் அனுப்பிய குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பின் இன்ஃபோ ஆப்ஷனை குறிக்கும் (i) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இது சாட் விண்டோவின் மேல் காணப்படும். இந்த அம்சம் கொண்டு நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய ஃபார்வேர்டெட் மெசேஞ்களில் மட்டுமே வேலைசெய்யும்.


உங்களுக்கு வரும் ஃபார்வேர்டெட் மெசேஞ்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அதே குறுந்தகவலை நீங்கள் உங்களது காண்டாக்ட்களுக்கு ஃபார்வேர்டு செய்து மெசேஞ் இன்ஃபோ பகுதியில் அது எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஃபிரீக்வென்ட்லி ஃபார்வேர்டெட் அம்சத்தில், ஒருவர் குறுந்தகவலை நான்கு அல்லது அதற்கும் அதிகமானோருக்கு ஃபார்வேர்டு செய்திருந்தால் பயனர் அனுப்பிய குறுந்தகவலில் பார்க்க முடியும்.

வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்களும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் அடுத்த பீட்டா அப்டேட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா 2.19.80 ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஓ.எஸ். தளங்களில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!