உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டதா? தகவல்களை அழிப்பது எப்படி?


நீங்கள் தொலைத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

அடுத்து உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

தொடர்ந்து அங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.


உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் — Sound, Lock and Erase

இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!