பருக்கள் வராமல் இருப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி தெரியுமா?


சிலரது கருத்து பருக்கல் தோன்றுவதற்கு காரணம் ஈரல் அல்லது வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுவதே. ஆனால் அது உண்மை அல்ல. இது ஒரு பொதுவான சருமப் பிரச்சினை. இதற்கு ஹார்மோன்கள் முதல் பரம்பரை வர பல காரணிகள் உள்ளன. ஆனால் இன்று பார்க்க இருப்பது உணவுப் பழக்கத்தால் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதே…

ஆரோக்கியமற்ற உணவுகளால் ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலையற்ற தன்மை பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது.

மாச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதனால் அது இன்சுலீனை அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் இரத்தத்தில் ரெஸ்ட்ஸ்ரிரோன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதனால் சருமத்தில் பருக்கள் ஏற்படுகின்றது.

பருக்கள் வராமல் தடுப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் எவை?

1. குறைந்தளவு கிளைசிமிக் உள்ள உணவுகள்:
கிளைசிமிக் புள்ளி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதனால் பருக்கள் அதிகமாக வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதனால் கிளைசிமிக் குறீயீடு உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

2. சிங்.
சிங் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதனால் அவை பருக்கள் வராமல் தடுப்பதுடன், அவற்றை குணப்படுத்துகிறது. பூசனிக் காய் விதை, கடலுணவு, மாட்டிறைச்சி போன்றவற்றில் அதிக சிங் எனும் கனியுப்பு காணப்படுகிறது. இது சரும விருத்திக்கு உதவுவதுடன், மெட்டபோஇசம், ஹார்மோன் அளவை சீராக்குகிறது.

3. விட்டமின் ஏ & ஈ.
பருக்கள் வருவதற்கான் அமிக முக்கியமான காரணம் விட்டமின் ஏ மற்றும் ஈ. விட்டமின் ஏ அதிகமாக கரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்ரும் விட்டமின் ஈ பாதாம், கீரை, அவகோடா போன்றவற்றிலும் அதிகமாகக் காணப்படுகிறது

4. ஒமேகா-3 கொழுப்பமிலம்.
ஒமேகா -3 கொழுப்பமிலம் அழற்சியைக் குறைத்து வீக்கத்தையும் பருக்களை உடைப்பதற்கு உதவுகின்றது. இது கொழுப்புள்ள மீன்கள், வால்நட்ஸ், சீயா விதை, ஆளி விதை போன்றவற்றில் அதிகம் உள்ளது.

5. புரோபயோட்டிக்.
புரோபயோட்டிக் குடலின் அழற்சியைக் குறைப்பதன் மூலம் பருக்கள் வராமல் தடுக்கும். பிறிபயோட்டிக் மற்றும் புரோபயோட்டிக் அழற்சித் தன்மையையும், ஒக்ஸிஜன் தாக்கத்தை குறைத்து பருக்கள் வருவதை தடுக்கும். புரோபயோட்டிக் அதிகம் உள்ள தயிர், கறுப்பு சாக்லேட் சாப்பிடுவது சிறந்தது.

6. பழச்சாறுகள்.
பழச்சாறுகளில் அதிகளவான தாவர ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதனால், சருமத்தின் கொலாஜன், இணைக்கும் திசுக்களை சரி செய்வதனால் பருக்கள் உருவாகாமல் தடுக்கின்றது. மேலும் சல்பர் பருக்களிற்கு எதிராகச் செயற்படுவதனால் சல்பர் அதிகமுள்ள அன்னாசி, பப்பாசி, தர்ப்பூசனி, புரோக்கோலி, காலே போன்றவற்றினை பருகுவதனால் பருக்கல் வராமல் தடுக்கலாம்.

7. கிறீன் டீ.
கிறீன் டீயில் அண்டிஒக்ஸிடன் இருப்பதனால் அவை பருக்கல் வராமல் தடுக்கின்றது. மேலும் இதில் காணப்படும் கட்டச்சின் நுண்ணங்கித் தொற்றுக்களை முற்றாக அழித்து விடுகிறது. அத்துடன் வீக்கத்தையும் சிவந்து போவதையும் குறைத்து விடுகிறது. கிறீன் டீயில் உள்ள அண்டிஒக்ஸிடன் ஹார்மோன்களின் அளவை சீராக்குகின்றது. இதனால் பருக்கள் வராமல் தடுக்கும்.

சருமப் பருக்களை குணப்படுத்த இவற்றை தவிர்ப்பது அவசியமானது.
• பருக்களை நீக்குவதற்கு சீனி உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணாவுகள், மென்பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது.
• பால் உணவுகளை தவிர்த்தல். குறிப்பாக மாட்டுப் பால்.
• மாச்சத்துள்ள உணவுகளையும், பால் உணவுப் பொருட்களையும் முடிந்த வரை குறைத்தல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!