சாமி கும்பிடும்போது எந்த கடவுளை எந்த திசையில் நின்று வணங்க வேண்டும்..?


கடவுள் தரிசனம் பார்க்க கோயிலுக்கு முண்டியத்துக் கொண்டு போகிறோம். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் கடவுளிடம் தான் வந்திருப்பதை மணியடித்து, கைகூப்பி வருகைப்பதிவு செய்கிறோம்.

தனக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் கேட்டு, வரமாக வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டும். தனக்கு இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் நாம், கடவுளை எப்படி நின்று, எந்த திசை பார்த்து வழிபட வேண்டும் என்று யோசிப்பதே இல்லை. கோயிலின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சிலர் கையெடுத்து கும்பிடுவார்கள். ஏன்… நெடுஞ்சாண் கடையாக விழுவதைக்கூட நாம் பார்த்திருப்போம்.


எந்த கடவுளை எந்த திசையில் நின்று வழிபட வேண்டும் என்று தெரிந்துகொண்டு வழிபட்டால், கடவுளும் மகிழ்ச்சியடைவார். நாம் வேண்டிய பலன்களும் கைகூடும்.

மூலவருக்கும், அவருக்கு எதிர்புறம் உள்ள அவரது வாகனத்துக்கும் இடையில் நின்று வழிபாடு செய்யக்கூடாது. அர்ச்சகர்கள் பலரும் வழிவிட்டு நிற்கும்படி கூறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.


சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது.

இம்மூச்சுக்காற்று தடை படாமல் செல்வதற்காகவே குறுக்கே போகக் கூடாது, சன்னிதியை விட்டு அகன்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள்.-
Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!