வாட்ஸ்அப் பிஸ்ன்ஸ் ஆப் விரைவில் வெளி வருகிறது…!


வாட்ஸ்அப் செயலியை தனிநபர்கள் மட்டுமின்றி வியாபார நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க வாட்ஸ்அப் செயலியை அதிகளவு பயன்படுத்தி வருகின்றன.

உலகின் மற்ற பகுதிகளை விட ஆசியாவில் இந்த வழக்கம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி வியாபாரம் செய்வோருக்கு என பிரத்யேக செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

தற்சமயம் வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகள் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


அதன்படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகள் உறுதியானதா என்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்ற வாக்கில் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகளுடன் சாட் செய்யும் போது, குறிப்பிட்ட காண்டாக்ட் ப்ரோஃபைல் வகை எவ்வாறானது என்பதை பார்க்க முடியும். உறுதி செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்கில் பச்சை நிற பென்ச்மார்க் பேட்ஜ் வழங்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் எதிர்பார்க்கப்படும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி தனியார் டெஸ்டர்கள் மூலம் சோதனை செய்யப்படுவதாகவும்,விரைவில் இது பிரத்யேக செயலியாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் ‘வாட்ஸ்அப் டெஸ்ட் பார்ட்னர்கள் பல்வேறு புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்த முடியும். புதிய செயலியை சோதனை செய்யும் போது, உங்களது அனுவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டு செயலியை மேம்படுத்த உதவுங்கள்’. என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமான வாட்ஸ்அப் செயலியை விட வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி முற்றிலும் வித்தியாசமானது ஆகும். வழக்கமான செயலியில் இருந்து பிஸ்னஸ் செயலியின் சின்னம் (லோகோ) மாற்றப்பட்டு பச்சை நிற ஐகானில் ‘B’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

செயலியை டவுன்லோடு செய்வதில் எவ்வித மாற்றங்களும் இருக்காது. இந்த செயலியில் வியாபாரத்திற்கான கணக்குகளை உருவாக்குவது, பதில் அளிப்பது, சாட் மைக்ரேஷன் மற்றும் அனாலடிக்ஸ் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம்: Android Police. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!