உங்கள ஒரு தடவையாவது இந்த நோய்கள் கட்டாயம் தாக்கியிருக்கும்..!


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்திற்கு எதிராக பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்குள் ஆளாகியிருக்கிறோம். உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் எதற்காகா என்ற பதில் கூட பலருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி கலந்தாலோசிப்பதற்கு மருத்துவரே சிறந்த நபர். எதுவாக இருந்தாலும் இந்த ஜந்து நோய்களை எல்லோரும் வாழ்வில் ஒரு தடவையாவது சந்திக்க நேரிடும்.

1. முதுகு வலி.
முதுகு வலியால் எதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது நாம் பாதிக்கப்படிருக்கிறோம். இதற்கு காரணாம் தசைகளில் ஏற்படும் பிடிப்புக்களே காரணம். இதனால் நமது அன்றாட வேலைகளியும் செய்வது முடியாத காரியமாகும்.
இதற்கு மருத்துவ ஆலோசனைப்படி சரியான உடல் அசைவுகளை மேற்கொள்வதுடன், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்வது இதிலிருந்து தீர்வைப் பெற்றுத் தரும்.


2. தலை வலி.
தலை வலி என்பது எல்லோருக்கும் அடிக்கடி ஏற்படுவதே. இதற்கு காரணம் அலுவலக பணி, வீட்டு பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தமே காரணம். அதுமட்டுமன்றி உடல் வறட்சி ஏற்படுவதனாலும் தலைவலி ஏற்படும்.

தலை வலிக்கான சரியான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்வது மிகவும் அவசியமானது.

3. பற்கூச்சம்.
பற்களில் உள்ள நரம்புகள் வெளியே தெரிய ஆரம்பிப்பதனால் பற்கூச்சம் ஏற்படுகின்றது. இதன் போது சூடான பானங்களையோ அல்லது குளிரான பானங்களையோ அருந்துவது அதிக பல்வலியைக் கொடுக்கும்.
இதற்கு சரியான தீர்வு பல் மருத்துவரின் ஆலோசனைப்படி பற்களை பராமரிப்பதுடன், சரியான பற்பசையை தேர்ந்து பயன்படுத்துவது அவசியமானது.


4. முடி உதிர்வு:
தினமும் 50 முதல் 100 முடிகள் உதிர்வது என்பது முடியின் ஆரோக்கியமற்ற தன்மையாலும், அதனுடைய சுகாதாரத்தை பேணாமையாலும் ஏற்படுவதே. அத்துடன் மன அழுத்தத்தால் முடி உதிர்வு அதிகமாகும்.
முடிக்கு சராசரியான பராமரிப்பு கொடுப்பதுடன், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதனாலும் முடி உதிர்வைத் தவிர்க்க முடியும்.


5. நெஞ்செரிச்சல்.
நெஞ்செரிச்சல் எனப்படுவது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிக்கும் போது நெஞ்சுப் பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் கொழுப்பு, எண்ணெய் உணவுகள் அதிகம் உட்கொள்ளுதல், அல்ககோல், மென்பானங்கள் அருந்துதல் போன்றவற்றால் நெஞ்செரிச்சல் அதிகமாகும்.

இதனை குணப்படுத்துவதற்கு தூக்கத்தை சரியாகப் பேணுதல், மன அழுத்தம் ஏற்படாமல் இருத்தல், சரியான முறையில் உணவை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றால் நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விட முடியும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!