உங்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்..!


நீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையே. இது பெரியவர்கல் மட்டுமல்லாது சிறியவர்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பதே உண்மை.

ஆனால் சிலருக்கு தாங்கள் நீரிழுவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூட அறியாதவர்களாக தான் இருக்கிறார்கள். உங்களில் பலருக்கும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டால் அறிந்து கொள்வது எப்படி என்ற கேள்வி கண்டிப்பாக இருக்கும்.

நீரிழிவு நோய் வந்ததை அறியப்படுத்தும் 10 அறிகுறிகள்:

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
இரத்தத்தில் அதிகளவு குளுக்கோஸ் இருப்பதனால் சிறுநீர் அடிக்கடி வெளியேறுவதை தவிர்க்க முடியாது. இரவு நேரங்களிலும் அதிகளவான சிறுநீர் வெளியேறும்.

2. எப்போதும் தாகம் ஏற்படுதல்.
அதிகளவு சிறுநீர் கழிப்பதனால் உடல் விரைவாக வறட்சி அடையும். இதனால் தாகம் அதிகளவில் ஏற்படும்.

3. வாய்த் துர்நாற்றம்.
உடல் வறட்சி ஏற்படுவதனாலும், சக்திக்காக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதனால் ஏற்படும் மாற்றங்களால் வாய்த் துர்நாற்றம் உருவாகிறது.

4. எப்போதும் பசி ஏற்படுதல்.
உடலால் குளுக்கோஸை சரியான அளவில் பயன்படுத்தாதனால் மூளை பசியைத் தூண்டச் செய்வதனால் அடிக்கடி பசி ஏற்படும்.


5. கலங்களான பார்வை:
கண்களில் நீர்த் தேக்கம் ஏற்படுவதனால் கலங்களான பார்வை ஏற்படுவது பொதுவானதே.

6. ஊசி குத்துவதைப் போன்று கை கால்களில் வலி ஏற்படுதல்.
இரத்த நரம்புகளில் மாற்றங்கள் ஏற்படுவதனால் இரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள் ஏற்படும். இதனால் நரம்புகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டு கால் மற்று கை பகுதிகளில் ஊசி குத்துவதை போன்று வலி ஏற்படும்.

7. கால்களில் ஏற்படும் காயங்கள் ஆறாது தொற்றுக்கள் ஏற்படுதல்.
கால்களிற்கு போதியளவு இரத்தமும் ஒக்ஸிஜனும் கிடைக்காமையால் கால்களில் உள்ள காயங்கள் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.

8. முயற்சிகள் எதுவுமின்றி உடல் எடை குறைவடைதல்.
மற்றொரு அறிகுறி உடல் எடை எந்த முயற்சிகள் இன்றி திடீரென குறைவடைதல். இதற்கு காரணம் குளுக்கோஸ் சரியான அளவில் சக்தியாக மாறாததால், உடலில் படிந்துள்ள கொழுப்புக்கள் மற்றும் தசைப் பகுதிகளினால் சக்தி வேளியேறுவதனால் உடல் எடை குறையும்.

9. எப்போதும் சோர்வாக இருத்தல்.
எட்டு மணி நேர தூக்கத்தின் பின்னும் சோர்வாக இருப்பதற்கு காரணம், உடலால் சரியாக குளுக்கோஸை சக்தியாக மாற்ற முடியாததே காரணம். இது நீரிழிவு நோய்க்கான அறிகுறியே.

10. கழுத்து மற்றும் அக்குள் பகுதிகள் கறுப்பாக மாறுதல்.
கழுத்தும் மற்றும் அக்குள் பகுதிகளில் சூரிய கதிர்களின் பாதிப்புக்கள் எதுவும் இல்லாமல், மற்றைய உடல் பகுதிகளை விட திடீரென கறுப்பு நிறமாக மாறுவது 2 ஆம் வகை நீரிழிவிற்கான அறிகுறியே. .- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!