வீட்டில் அடிக்கடி தூசு பிடிக்கிறதா? இதோ எளிமையான வீட்டுக் குறிப்புக்கள்..!


வீட்டை அழகாக வைத்திருப்பது என்பது ஓர் கலை தான். ஆனால் எவ்வளவு அழகாக பேணினாலும், நம்மை மீறி தூசி பிடிப்பதை தவிர்க்க முடிவதில்லை.

பெண்களை பொறுத்தவரையில் வீடு தான் கோவில். அதனை அழகாகவும், அலங்காரமாகவும் வைத்திருப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வேலைபளுவான நாட்களில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் போது வீடு நமக்கு பிடித்ததாக இருந்தால் மட்டுமே, நம்மால் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியும்.

பெண்களிற்கு வீட்டை சுத்தப்படுத்துவது என்பது பெரிய காரியமல்ல. ஆனால் அதனை அப்படியே பேணுவது என்பதே மிகவும் கடினமானது. முதல் நாள் தூசி துடைத்த பின் மறுநாள் தூசியாகி விடுகிறது.

இதற்கு காரணம் தூசிகள், தலைமுடி, துணியின் கழிவுகள், மரத்தூள், இரசாயனபொருள், மனித சருமத்தின் இறந்த கலங்கள் போன்றவை வீட்டில் சேர்வதனால் தூசியாகி விடுகிறது. இதனை சுத்தம் செய்து வீட்டை எப்போதும் தூசிகளின்றி பேண உங்களுக்கு சில இலகுவான வழிமுறைகள் உள்ளன.

வீட்டினை சுத்தமாக வைத்திருப்பது என்பது வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

தூசிகளின்றி வீட்டை பேணுவது எப்படி???

1. கம்பளங்களைதவிர்த்தல்.
கம்பளங்களில் அதிகமாக தூசி படிவதால் வீட்டில் தூசி சேருகிறது. தினமும் வக்யூம் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். குறித்த கால இடைவெளியில் கம்பளங்களை சலவை பவுடரை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அல்லது, கம்பளங்களிற்கு பதிலாக பிளாஸ்டிக் கால்விரிப்பை பயன்படுத்தல் சிறந்தது.


2. யன்னல்களை மூடி வைத்தல்.
வீதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வாகனப் புகையால் ஏற்படும் தூசி அதிகமாக சேருகிறது. இதனால் யன்னல்களை மூடி வைத்தல் அவசியமாகும். அதிகாலை வேளையிலும் இரவு வேளையிலும் புத்துணர்ச்சியான காற்றிற்காக யன்னல்களை திறந்து வைக்கலாம்.

3. வீட்டை பெருக்கி மொப்செய்தல்.
வீட்டை குறிப்பிட்ட காலஇடைவெளியில் தூசைத் துடைத்து, பெருக்கி, மொப் செய்து வருவது அவசியமாகும்.

4. ஈரப்பதமாக்கியை பயன்படுத்தல்
உலர்வான பகுதியில் அதிகளவான தூசிகள் உருவாவதற்கும் படிவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் ஈரப்பதமாக்கியை பயன்படுத்தல் சிறந்த தீர்வை தரும்.

5. குப்பைகளை அகற்றுதல்
பயன்படுத்தாத பொருட்கள், குப்பைகள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைக்காது அகற்றுதல் சிறந்தது.

6. துணியால்மற்றும்கம்பளியால்செய்யப்பட்டதளபாடங்களைதவிர்த்தல்
துணியால் செய்யப்பட்ட தளபாடங்களில் அதிகமாக தூசி படிவதால் மரத்தளபாடம் அல்லது லினனினால் உருவாக்கப்பட்ட தளபாடங்களை பயன்படுத்தல் சிறந்தது.

7. காலணிகளைவெளியேவைத்தல்.
வீட்டிற்குள் காலணிகளை கொண்டு செல்லுவதை தவிர்ப்பதால் தூசி உட்செல்லுவதை தவிர்க்க முடியும். .- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!