பச்சையாக இவற்றை சாப்பிட்டால் உடலில் விஷத்தன்மை பரவி விடுமாம்..!!


காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் சிலவகை காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. அவற்றிலுள்ள கடினமான கார்போஹைட்ரேட் ஜீரண சக்தியை தாமதப்படுத்துகிறது. அதோடு ஜீரண மண்டலத்தின் செயல்திறனையும் குறைத்துவிடுகிறது.

சில உணவுகளில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகிக் கொண்டேயிருக்கும். அதனால் சில உணவுப்பொருள்கள் ஆரோக்கியமானவையாகவே இருந்தாலும் பச்சையாக சாப்பிடக்கூடாது.


உருளைக் கிழங்கை வேக வைத்து அல்லது வறுவல் செய்து சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இருந்தாலும் சிலர் பச்சையாகவே மென்று முழுங்குவார்கள். இதிலுள்ள ஸ்டார்ச் ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் அது வாயுத்தொல்லை, வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தும். அதுபோலவே பச்சையாக இருக்கும் உருளைக்கிழங்கில் சோலானைன் என்ற பொருள் விஷத்தன்மை கொண்டதால் அதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


முளைகட்டிய பயிறு வகைகள் உடலுக்கு உறுதியையும் ஆரோக்கியமும் நிறை்நதவை தான். ஆனாலும் முளைக்கட்டும்போது ஈகோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்புள்ளது. அதனால் முளைகட்டிய பயறுகளை வேகவைத்துப் பின் பயன்படுத்துவது நல்லது. முளைகட்டிய பயறுகளை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.


சிவப்பு பீன்ஸை சமைக்காமல் சாப்பிடவே கூடாது. ஏனெனில் அதில் அதிகப்படியாக இருக்கும் லெக்டின் மற்றும் ஃபைடோஹீம் அளூடினின் என்ற வேதிப் பொருட்களே இதற்கு காரணம். பீன்ஸை பச்சையாகச் சாப்பிட்டால் வாந்தி, பேதி உண்டாகும்.


தேன் மிகவும் நல்லதுதான். ஆனால் தேனிலுள்ள க்ரேயனோடாக்ஸின் என்ற பொருள் நிறைய பேருக்கு அலர்ஜியை உண்டாக்கிவிடும். எனவே வெறும் தேனை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதனை பால் போன்ற ஏதாவது மற்ற பொருள்களுடன் கலந்து சாப்பிடவேண்டும். தனியாகச் சாப்பிடக் கூடாது.


மரவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச்சுடன் பெரிய மூலக்கூறுகள் கொண்ட சயனைடுகள் இருக்கின்றன. கிழங்குகளைச் சமைத்து சாப்பிடும்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். பச்சையாக சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் சயனைடில் உள்ள விஷத்தன்மை உடல் நலத்தைப் பாதிக்கும்.


பாலை நிறைய பேர் பச்சையாக குடிப்பார்கள். ஆனால் அதனை நன்றாக காய்ச்சி குடிக்கவில்லையென்றால், அதிலுள்ள கிருமிகள் குடல் நோய்களை உருவாக்கிவிடும். காய்ச்சி குடிப்பதால் சத்துக்கள் வீணாகும் என்ற தவறான கருத்து இருக்கிறது. ஆனால் பாலை நன்கு காய்ச்சிய பிறகு தான் குடிக்க வேண்டும்.-
Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!