கருவில் உள்ள குழந்தையின் உடல் நிறையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்..!


பெண் ஒருத்தி கருவுற்றவுடன் அவளது உடல் நலம் மட்டுமின்றி அவளது வயிற்றில் வளரும் குழந்தை தொடர்பிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

குழந்தையின் வளர்ச்சி தொடர்பில் கண்டு கொள்ள அடிக்கடி வைத்தியரை அணுக வேண்டும். குழந்தையின் வளர்ச்சிக்கென வைத்தியர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டும்.

வயிற்றில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்க சில குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அந்த உணவுகள் என்ன என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.

01. முட்டை
முட்டையில் உள்ள புரோட்டீன், போலிக் அமிலம், கோலின் மற்றும் இரும்பு என்பன குழந்தையின் உடல் நிறையை அதிகரிக்கச் செய்வதில் பெரும் பங்களிப்பு செய்யும்.

02. உலர்ந்த பழங்கள் மற்றும் தானியங்கள்
உலர்ந்த பழங்கள் மற்றும் தானியங்களில் உள்ள புரோட்டீன்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் நிறையை அதிகரிக்கச் செய்யும். உலர்ந்த பழங்களில் பேரீச்சம்பழம், உலர்ந்த அப்ரிகொட் மற்றும் பிக் பழம் என்பன சிறந்தவை.

03. பால்
கர்ப்பிணித் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு கோப்பை பால் அருந்துதல் வேண்டும். நாளொன்றுக்கு 200 – 500 மில்லி லீட்டர் பால் அருந்துவதன் மூலம் குழந்தையின் நிறையில் அதிகரிப்பு ஏற்படும் என்பது உறுதி.


04. யோகட்
குழந்தைகள் குறை நிறையுடன் பிறப்பதை இந்த யோகட் தடுக்கிறது. உண்மையில் சொல்லப் போனால் பாலில் உள்ள கல்சியத்தை விட யோகட்டில் அதிகளவு கல்சியம் உள்ளது. அத்துடன் விட்டமின் பிகாம்பிளெக்ஸ் மற்றும் ஸிங்க் போன்றனவும் இதில் அடங்கியுள்ளது. நாளொன்றுக்கு மூன்று யோகட் உட்கொள்வது சிறந்தது.

05. பச்சை கீரை வகைகள்
பச்சை கீரை வகைகளை உட்கொள்வதன் மூலம் விட்டமின் ஏ, விட்டமின் சி, போலேட், இரும்பு மற்றும் மக்னீசியம் என்பன கீரைவகைகளை உட்கொள்வதன் மூலம் பெறப்படுகின்றது. புரொக்கோலியை உட்கொள்வதன் மூலம் குழந்தையின் கண் பார்வை விருத்தியடைவதோடு என்பு மற்றும் தோல் என்பன பாதுகாக்கப்படுகின்றது. இதன் மூலம் குழந்தையின் எடை அதிகரிக்கின்றது.

06. மீன்
மீன் வகைகளில் உள்ள ஒமேகா – 3 குழந்தையின் முழு உடல் வளர்ச்சிக்கு உதவி புரிகின்றது. மீன்களில் அதிகளவு புரோட்டீனும் காணப்படுகின்றது.

07. பருப்பு வகைகள்
ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் பருப்புவகைகளை உட்கொள்வது அவசியம். கடலை, சோயா, கிட்னி பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் குழந்தையின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!