செவ்வாய் கிரகத்தில் பெரிய பனிப்பள்ளத்தாக்கு… அசத்திய விஞ்ஞானிகள்..!


ஐரோப்பிய விண்வெளி நிலையத்தினால் செவ்வாய் கிரகத்தில் பெரிய பனிப்பள்ளத்தாக்கு இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோரோலீவ் என பெயரிடப்பட்டுள்ள 81.4 கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட பகுதியிலேயே இந்த பனிப்பள்ளத்தாக்கு காணப்படுகின்றது. இப்பனிப்பள்ளத்தாக்கின் விட்டமானது சுமார் 2 கிலோ மீட்டர்கள் இருக்கிறது.

இதற்கான ஆதாரங்களை ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் எனும் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இவ்விண்கலமானது 2003 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அதனை கொண்டாடும் முகமாக இந்த அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!