சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும் சயனைட் போன்ற விஷம் வீட்டில்…!


நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். “ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.”


உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன. கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது.


ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?. இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.

போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.


இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று. நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.

வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!