தொப்பைக்கு காரணம் வயிற்றில் சேரும் வாயு என தெரியுமா..? தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க…!!


உணவு செரிமானம் ஆகாத போது, அதிக அளவில் ஃபைபர் உணவுகள் எடுத்துக்கொள்ளும் போது மற்றும் கேஸ் நிறைந்த பானங்கள் குடிக்கும் போது வயிற்றில் கேஸ் சேருகிறது. எளிமையான உணவுகள் மூலம் இவற்றை எப்படி சரிசெய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!

திட உணவு வகைகளை குறைத்துக்கொண்டு அதிகமாக நீராகாரம் எடுத்துக்கொள்ளுங்கள். சூப், கஞ்சி, ஃபிரெஷ் ஜூஸ் ஆகியவற்றை பருகுங்கள்.


கேஸ்ட்ரிக் பிரச்னைகளுக்கு கடுகு மிகவும் சிறந்தது. அதனால் கடுகு சூப் வைத்து குடிக்கலாம்.

அதே போல் சூடான பானங்களை அருந்துங்கள். டீ, காபி, கிரீன் டீ, இஞ்சி டீ குடிக்கலாம்.


தண்ணீரை சுடவைத்து அதனுடன் சிறிது பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். அதனுடன் புதினா இலையை சேர்த்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

கேஸ் பிரச்னைகளுக்கு பூண்டு மிகச்சிறந்த தீர்வு. பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிடலாம். அல்லது பூண்டு, மிளகு, சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.


நீரில் பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். அதிகமாக குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கலாம்.

இலவங்கப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். அல்லது இலவங்கப்பட்டையை வறுத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து குடித்தாலும் நல்ல பலன் தரும்.

Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!