பாலுடன் இதை எல்லாம் சேர்த்து சாப்பிட்டால் பரலோகம் தானாம்..!!


பால் உடலுக்கு மிகவும் சத்தான உணவாகும். அதனால் தான் பிறந்த குழந்தையில் இருந்தே பாலை பருக தொடங்கிவிடுகிறோம். எல்லா வயதினருக்கும் ஏற்ற சத்தான உணவான பாலை, வேறு சில சத்தான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏன் அப்படி சாப்பிடக்கூடாது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்!

பாலை வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இந்தப்பழங்கள் செரிக்கும் போது வெப்பத்தை உருவாக்கும். பால் குளிர்ச்சி தன்மை உடையது.

இரண்டு எதிரெதிர் தன்மை கொண்டவற்றை சாப்பிடும் போது வயிற்றில் எரிச்சல் உண்டாகும். மேலும் இவை வயிற்றில் நச்சுகளை அதிகம் உருவாக்கும்.


இதன் விளைவாக சளி, இருமல், அலர்ஜி ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தரும் பாலை செரிக்க வைக்க செரிமான மண்டலம் அதிகம் நேரம் எடுத்துக்கொள்கிறது. அதனால் பாலை, புரோட்டின் நிறைந்த இறைச்சி உடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான மண்டலத்தில் அழுத்தம் மேலும் அதிகரிக்கும்.

அதனால் பாலுடன், இறைச்சி சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படும்.


பாலையும், மீனையும் ஒன்றாக சாப்பிடும் போது சருமத்தில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஏனென்றால் இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

இவை ரத்த ஓட்ட பிரச்னை, இதயக்கோளாறு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

பால் மற்றும் உப்பு எதிரெதிர் பண்பு கொண்டவை. அதனால் பாலையும், உப்பையும் எப்போதும் ஒன்றாக சாப்பிடக்கூடாது.

Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!