இலங்கையை தாக்கியது புயல்.. 4 பேர் மரணம் – 23 பேரைக் காணவில்லை…!!


தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இலங்கை அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக மாறி இலங்கையை தாக்கியது. இதன் காரணமாக இலங்கை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்த புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 23 பேரைக் காணவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து 200 கி.மீ. நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 150 மிமீ மழை பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.


கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றம் காரணமாக கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த மே மாதம் பெய்த மழையின்போது மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!