சாப்பிட்டதும் உடனே நீர் குடிக்கும் பழக்கமுடையவரா..? முதலில் இத படிங்க..!!


சாப்பிட்ட உடனே நீர் குடிக்கும் பழக்கம் தவறானது என நம்மில் பலரும் நினைக்கிறோம். இது உண்மையானதா?..

சாப்பிட்ட உடனே நீர் குடிப்பது தவறான செயல் என நாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாப்பிடும்போதும், சாப்பிட்ட பிறகும் நீர் குடித்தால், ஜீரணக் கோளாறு ஏற்படும் எனவும் கூறுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

உண்மையில், அது அவ்வளவு பெரிய தவறு ஒன்றும் இல்லை. சாப்பிடும்போது, விக்கல் எடுத்தாலோ, தாகம் அதிகமாக இருந்தாலோ நீர் குடிக்கலாம். சாப்பிட்ட உடனேயும், நாம் விரும்பும் அளவுக்கு நீர் குடிக்கலாம்.


இதனால், நமது உடலில் சுரக்கும் ஜீரண நொதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உணவுப் பொருள் ஜீரணத்தின்போது, பலவித படிமாறுதல்களை சந்திக்கிறது. அந்த நேரத்தில் நீர் அருந்துவதால், ஜீரண மாற்றம் ஏதும் ஏற்படாது. அது, ஜீரணத்திற்கு மேலும் உதவும். ஏனெனில், நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுமே, முற்றிலுமாக, உடல் உறுப்புகளால் சிதைக்கப்பட்டு, முழுதாக ஜீரணிக்கப்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 24 மணிநேரம் ஆகும்.

அதாவது, இயற்பியல் படிம நிலையில் இருந்து, முழுவதும் வேதியியல் நிலைக்கு அந்த உணவுப்பொருள் மாற, 24 மணிநேரம் ஆகும். இவ்வளவு நேரமும் நாம் நீர் அருந்தாமல் இருக்க முடியுமா, முடியாது. தேவையான நீரை நாம் ஒருபுறம் குடிக்க, ஜீரணம் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கும்.

இனிமேல் சாப்பிடும்போதும், சாப்பிட்ட பிறகும் நீர் அருந்த அச்சப்படாதீர்கள்..

Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!