வழுக்கை பிரச்சனைக்கு… தினமும் இந்த எண்ணெயை தேய்த்து வர முடி வளருமாம்..!!


வழுக்கை ஏற்படுவதற்கு நிறைய காரணங்களை கூறலாம். ஆனால் முக்கியமான ஒன்று மரபணுக்கள்.

ஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன்தான் உங்கள் தலைமுடியின் பலத்தை நிர்ணயிக்கும். பரம்பரையாக சிலருக்கு இந்த ஹார்மோன் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இதன் காரணமாக சீக்கிரமே வழுக்கை விழுந்துவிடும்.

பரம்பரையாகத்தான் இந்த வழுக்கை ஏற்படுகிறது என்றில்லை யாருக்கும் ஏற்படலாம்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சீரகம் 1 ஸ்பூன் போட்டு அதனை இரவில் நீரில் ஊற வைத்துவிடுங்கள். மறு நாள் இந்த ஊறிய கலவையில் சிறிது கருவேப்பிலை கலந்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து த்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலையில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து , நன்றாக தேய்த்து தலைமுடியை அலசுங்கள். ஷாம்பு பயன்படுத்த தேவையில்லை. வாரம் ஒரு முறை செய்தால் முடி அடர்த்தியாக வளரும். ஒருபோதும் முடி கொட்டாது

கடுகு எண்ணெய் ஒரு கப் எடுத்து அதில் மருதாணி இலையை 4 டேபிள் ஸ்பூன் போட்டு, கொதிக்க வையுங்கள். நன்றாக கொதி வந்ததும் இந்த எண்ணெயை நன்கு வடிகட்டி தினமும் தலையின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி நன்கு தூண்டப்படும்.

Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!