நீரிழிவு நோயாளர்கள் ஏன் கட்டாயம் வெறுங்காலில் நடக்க வேண்டும்..?


இந்தியப் பாரம்பரியம் உலகிற்கு யோகா, ஆயுர்வேதம் போன்ற பல விலைமதிப்பற்ற பொக்கிக்ஷங்களை கொடுத்துள்ளது. அந்த வரிசையில் அவர்களது இன்னொரு பழக்கத்தையும் எல்லோரும் கவனிக்க ஆரம்பித்து விட்டனர். வெறுங்காலில் வீட்டிற்குள் நடப்பதும், வெளியே சில இடங்களில் வெறுங்காலுடன் செல்லும் பழக்கமும் உள்ளது.

நம்மில் பலருக்கு பாதணிகள இல்லையென்றால் படுக்கையில் இருந்தே கீழே இறங்குவதையே தவிர்த்து விடுகின்றனர். ஆனால் பாதணிகள் இன்றி வெறுங்காலில் நடப்பதனால் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா? எனக் கேட்டால் ஆம் என்றே பலர் பதில் சொல்கின்றனர்.

வெறுங்காலில் நடப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

1. தூக்கமின்மையை சரி செய்யும்
வெறுங்காலில் வெளியே நடப்பதனால் குறிப்பாக புற்தரைகளில் நடப்பதனால் உடல் நேரடியாக புவியுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதனால் புவியின் மின்காந்த விசையுடன், உடலில் இருந்து வெளியேறும் மின்காந்த விசையும் ஒத்திசைக்கின்றது. இதனால் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் தூக்கமின்மை பிரச்சினையையும் சரி செய்கிறது.

2. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது
வெறுங்காலில் நடக்கும் போது பாதங்களில் உள்ள நரம்புகளை ஆறுதல்படுத்தி கால் மற்றும் பாதங்களிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நீரிழிவு, வெரிக்கோஸ் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிறந்தது.

3. உடல் சமநிலையைப் பேணும்
உடலின் சமநிலை காதுப் பகுதியில் உள்ள வெஸ்ரிபர் தொகுதி மூலம் பேணப்படுகிறது. இதற்கு உடலின் எல்லாப் பாகங்களின் செயற்பாடுகளும் சரியாக நடைபெறுவது அவசியமானது. வெறுங்காலில் நடப்பதனால் உடலின் நரம்புத் தொகுதிகளின் செயற்பாடு சிறப்படையும். இதனால் உடற்சமநிலையைப் பேண முடியும்.

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வெறுங்காலில் நடப்பதனால் உடலில் உள்ள இரத்த கலங்களின் அளவும், அதன் தகுதியும் அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பேணப்பட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.

2. உடலில் சக்தியை அதிகரிக்கச் செய்யும்
மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றால் உடலின் சக்தி வெளியேறிவிடுகிறது. ஆனால் வெறுங்காலில் நடப்பதனால் உடல் நேரடியாக புவியுடன் தொடர்பு படுகிறது. இதனால் மனநிலையை சீராக்கி உடல் சக்தி அளவை அதிகரிக்கச் செய்கிறது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!