உங்களுக்கு சில நோய்களால் இப்படியொரு நிலை ஏற்பட்டு உள்ளதா..? இத முதல்ல படிங்க..!


உங்களுக்கு சில நோய்களால் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறதா சில ஆரோக்கிய பிரச்சனைகளால் பொது இடங்களிலும், உறவினர் முன்னிலையிலும் இயல்பாக இருக்க முடியவில்லையா??

அதற்கு காரணம் மற்றவர்கள் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்று தயக்கம் மனதில் இருப்பதனால் ஆகும்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோய்கள் தான் என்ன?

1. வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றத்தினால் மற்றவர்களுடன் இயல்பாக பேசி சிரிப்பதில் தயக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாய் சுகாதாரத்தில் அதிகளவான அக்கறை செலுத்தாமையே ஆகும். சாப்பாட்டிற்கு பின்பு, சரியாக பற்கள் துலக்கவில்லை என்றால் உணவுக் கூறுகள் வாயில் தங்குவதால் பக்டீரியாக்கள் வளர்ந்து விடுகின்றன. இதனால் தொற்றுக்கள் ஏற்படுவதுடன் துர்நாற்றத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

எனவே, வாய்ச் சுகாதாரத்தில் அதிகளவு அக்கறை செலுத்துவதுடன் மட்டுமல்லாது குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை நாடுதல் சிறந்தது.

2. உடல் துர்நாற்றம்
சிலர் உடல் துர்நாற்றம் ஏற்பட்டு விட்டால் மற்றவர்களுடன் சேர்ந்திருப்பதை தவிர்த்து கொள்கிறார்கள். அத்துடன் சுற்றி இருப்பவர்களும் அதனை விரும்புவதில்லை. உண்மையைச் சொன்னால், வியர்வைக்கு மணம் கிடையாது. ஆனால் அக்குள் போன்ற பகுதிகளில் வியர்வையில் அழுக்குகளை பக்டீரியாக்கள் சேர்ந்துஉருவாக்குகின்றன. எனவே, உடல் சுத்தத்தை சரியான முறையில் பேணுவது அவசியமானது .

3. பற் கூச்சம்
இப் பற் கூச்சத்தினால் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட்டங்களில் ஐஸ்கிரீம் சாப்பாடுவதோ மற்றும் வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து காபி சாப்பாடுவதோ முடியாத காரியாமாகவே போய் விடுகிறது. இப் பற்கூச்சத்திற்கு காரணம் பற்களின் வேர்ப்பகுதிகள் வெளியே தெரிவதே ஆகும்.

இதற்கு பல் மருத்துவரின் அறிவுரைப்படி சரியான சிகிச்சை முறையை பின்பற்றுவதே சிறந்தது.

4. மஞ்சள் நிறப்பற்கள்
பற்களின் சுத்தத்தை சரியாக பேணாமையால் பற்கள் மஞ்சள் நிறமடைகிறது. இதனால் மற்றவர்கள் முன்னிலையில் சிரித்து பேசுவதை பலர் தவிர்த்து விடுகின்றனர். வாய்ச் சுகாதாரத்தில் அதிக அக்கறையுடன் நடந்து கொள்வதே சிறந்த தீர்வு ஆகும்.

5. பருக்கள்
ஒவ்வொருவரது சருமநிலையை பொறுத்து பருக்கள் ஏற்படுவதுடன் பலருக்கும் பொதுவானது. ஆனால் பருக்கள் வந்ததும் அதற்காக மேற்கொண்டு கிள்ளுதல் போன்ற தவறான முயற்சிகள் தளும்புகளை ஏற்படுத்துகிறது. பருக்கள் வந்தால் சிறந்த தோல் நிபுணரின் அறிவுரையுடன் சரியான பிரச்சனையை கண்டறிந்து தீர்வை பெறுவது அவசியமானது ஆகும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!