இந்த புள்ளியில் 45 செக்கன்கள் அழுத்தம் கொடுத்து தான் பாருங்களேன்…!


எமது உடம்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அவற்றிற்கு உடம்பில் உள்ள மையப்புள்ளிகளை வைத்தே தீர்வு காண முடியும் என்கிறது அக்யூபஞ்சர் வைத்தியம்.

இந்த முறையின் கீழ் சைனஸ் பிரச்சினை மாத்திரமில்லாது ஏனைய பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எமது இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ளமையப் புள்ளியில் எமது விரலைக் கொண்டு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலம் சக்தி பிறப்பிக்கப்பட்டு ஏற்கனவே தடைப்பட்ட சக்திகள் மீண்டும் எழுப்பப்படும்.

இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு தசைகளில் உள்ள பிடிப்பு நீக்கப்படுவதுடன் மூளைக்கான இரத்த ஓட்டமும் சீராக அமையும். நரம்புகளை இணைக்கும் இந்தப் புள்ளியை அழுத்துவதன் மூலம் கவனம் செலுத்துவதற்கேற்ற திறன் அதிகரிக்கப்படுவதோடு தலைவலியும் குறைக்கப்படும்.

இதற்கென நீண்ட நேரம் செலவழிக்கத் தேவையில்லை. 45 செக்கன்கள் மற்றும் ஒரு நிமிடம் வரை புருவங்கள் இரண்டிற்கும் இடையில் உள்ள புள்ளியை அழுத்திப் பிடித்தால் போதுமானது.
குறித்த பகுதியில் ஏற்படுத்தப்படும் அழுத்தமானது உடலில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க மட்டுமல்லாது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கவும் உதவி புரிகின்றது.

இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நோய்கள் குணமடைவது துரிதமாக்கப்படுவதுடன் கண்கள் மற்றும் வாய் தொடர்புபட்ட குறைகளும் நிவர்த்தி செய்யப்படும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!