இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க இவை இரண்டையும் கலந்து பருகினால் போதுமானது!


மெல்லிய தேகத்திற்கு ஆசைப்படாத பெண்களே இல்லை என்று தான் கூற வேண்டும். பல பெண்களுக்கு டயட் இன்றி உடல் எடையை குறைத்துக் கொள்ளவே விருப்பம். பலர் அது முடியாத காரியம் என்று கூறுவார்கள். ஆனால் அப்படியல்ல. டயர் இல்லாமல் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செலவே இன்றி இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து எடையைக் குறைக்க முடியும்.

அது எப்படி என்கின்றீர்களா?
இதற்கு தேவையானதெல்லாம் இலவங்கப் பட்டைத் தூள் மற்றும் தேன் தான். உடல் எடையைக் குறைக்கும் இந்தக் கலவையை எவ்வாறு தயாரிப்பது எனப் பார்ப்போம்.

செய்முறை
எட்டு அவுண்ஸ் கொதித்த தண்ணீரை எடுத்து அதில் ஒரு மேசைக்கரண்டி இலவங்கப்பட்டைத் தூளை இட வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை ஆறவிட வேண்டும். ஆறியதும் 2 மேசைக் கரண்டி தேனை அதில் இட்டு கலக்க வேண்டும். இந்தக் கலவையை தினமும் காலையில் எழுந்தவுடன் மற்றும் இரவு கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னர் பருக வேண்டும்.

கார்டியோ பயிற்சி செய்வது எவ்வாறு?
முதலில் 20 செக்கன்களுக்கு ஜம்ப்ஸ் குவாட்ஸ் செய்ய வேண்டும். பின்னர் 10 செக்கன்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். உங்களால் முயன்றவரை இதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பயிற்சியை சரிவரச் செய்தால் ஒரு நிமிடத்தில் சுமார் 13.4 கலோரிகள் எரிக்கப்படும். பிறகென்ன? இதனைச் செய்து எடையை குறைத்திடுங்கள். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!