காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்ன நன்மைகள் தெரியுமா..?


தண்ணீர் என்பது நாம் அனைவரும் கட்டாயம் தினமும் பருக வேண்டியதொன்றாகும். எனினும், நம்மில் பலர் தண்ணீர் அருந்துவதற்கு அவ்வளவு முக்கியத்துவம் வழங்குவதில்லை.

அதிலும் குறிப்பாக காலை எழுந்ததும் தண்ணீர் பருகுவதை எம்மில் பலர் செய்வதேயில்லை என்று தான் கூறலாம். பொதுவாக தண்ணீருக்கு பதிலாக தேநீர் அருந்துவதற்கே எம்மவர்கள் பழகியுள்ளனர்.

உண்மையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதென்பது மிகவும் சிறந்த ஒரு விடயமாகும். அவ்வாறு தண்ணீர் பருகுவதால் எமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பது தொடர்பில் தற்போது பார்ப்போம்.

01. உணவு சமிபாட்டுத் தொகுதி சிறப்பாக செயற்படுவதோடு பெருங்குடல் சுத்திகரிக்கப்பட்டு நாம் உண்ணும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது அதிகரிக்கப்படும்.

02. குடலின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதோடு உடம்பிற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் துல்லியமாக வெளியேற்றப்படும்.

03. நெஞ்செரிவினால் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்போர் காலையில் தண்ணீர் அருந்துவதன் மூலம் நெஞ்செரிவிலிருந்து விடுபட முடியும்.

04. சிறுநீரகங்களில் கற்கள் தோன்றுதல் மற்றும் சிறுநீர்ப்பைத் தொற்று ஏற்படுதல் என்பன தடுக்கப்படும்.


05. இரத்த ஓட்டம் சீராக்கப்படுவதனால் தோலில் உள்ள சுருக்கங்கள் நீங்கி சருமம் அழகாகத் தோன்றுவதுடன் இளமையான தோற்றத்தை பெறமுடியும்.

காலையில் எழுந்ததும் எவ்வாறு நாம் தண்ணீர் அருந்த வேண்டும்?

படி 1
காலையில் எழுந்தவுடன் பல்துலக்குவதற்கு முன்னதாக 160 மில்லி லீட்டர் கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும்.

படி 2
பின்னர் அடுத்த 45 நிமிடங்களுக்கு எதனையும் உட்கொள்ளாதிருந்து 45 நிமிடங்கள் கழிற்தவுடன் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

படி 3
காலை உணவு உட்கொண்ட பின்னர் இரண்டு மணித்தியாலங்களுக்கு வேறு எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!