உடலில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் வேண்டாம்…!


ஈரல் என்பது எமது உடலில் உள்ள முக்கியமானதொரு உறுப்பாகும். எமது உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களை வெளியேற்றும் பணியை ஈரலே மேற்கொள்கின்றது. இந்த ஈரல் பாதித்து விட்டால் அது மரணம் வரை கூட எம்மை இழுத்துச் செல்லும்.

ஈரல் பாதிக்கப்பட்டு விட்டது என்றால், அதனை எமக்கு உணர்த்தும் வகையில் உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்த முயற்சிக்கும். அவை என்ன என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்!

01. எந்நேரமும் சோர்வாக இருப்பது போலவும், தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் என்பது போலவும் உணர்ந்தால், உடலில் கேடுவிளைவிக்கக் கூடிய பொருட்கள் அதிகளவில் உள்ளன எனவும் ஆனால் அதனை ஈரலால் சரிவர வெளியேற்ற முடியவில்லை எனவும் அர்த்தம்.

02. உணவு சரிவர சமிபாடடையாதிருக்கும். இதனால் பசியின்மை ஏற்படும். அத்துடன் உடல் எடை அதிகளவில் குறையும்.

03. குமட்டல் மற்றும் வாந்திபேதி என்பன அதிகளவில் ஏற்படும். இவையுடன் சேர்ந்து ஒற்றைத் தலைவலி மற்றும் மலச்சிக்கல் என்பனவும் ஏற்படும்.

04. உண்ணும் உணவுகள் எளிதில் சமிபாடடையாது காணப்படும். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் என்பன ஏற்படும்.

05. சிறுநீரின் நிறம் மாறும். கடும் செம்மஞ்சள் மற்றும் கபில நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

06. மலத்தின் நிறமும் மாறும். ஈரல் பாதிப்படைய ஆரம்பித்தவுடனேயே மலத்தின் நிறம் மாற்றம் அடையத் தொடங்கும்.

07. மஞ்சள் காய்ச்சல் ஏற்படும். கண்கள், விரல்கள், நாக்கு மற்றும் தோலின் நிறம் மஞ்சளாக மாறும்.

08. அடிவயிற்றில் வலி மற்றும் அடி வயிற்றில் வீக்கம் என்பன ஏற்படும்.

09. தோலில் ஒருவித அரிப்பு ஏற்படும். அத்துடன் நரம்புகளையும் தோலில் காணக்கூடியதாக இருக்கும்.

10. குடலினுள் இரத்தக் கசிவு ஏற்படும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!